ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையின் ஐந்து உறுதியான அடையாளங்கள் Jeffersonville, Indiana, USA 60-0911E 1நன்றி, சகோ. நெவில். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு இங்குள்ளது நிச்சயமாக ஒரு சிலாக்கியமே. இதை செய்ய தேவன் அனுமதித்ததைக் குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. புகைப் படக்கருவிகள் என்றால் எனக்கு சிறிது வெட்கம் தான்.... செல்லுங்கள், புகைப்படம் எடுங்கள், அதனால் பரவாயில்லை, இவர்களை நான் பார்க்கும் போது, இவர்கள் இருக்கிறார்கள் என்னும் உணர்வு உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. பரவாயில்லை. அதனால் பரவாயில்லை. இப்பொழுது, இங்கு சிறிது உஷ்ணமாயுள்ளது. கர்த்தரிடத்திலிருந்து நாம் இரண்டு மகத்தான செய்திகளைப் பெற்றுக் கொண்டோம். 2இப்பொழுது நான் எண்ணினேன், இன்றிரவு, இதைக் காண்கையில் .... என் நண்பர் பலர் வெகுதூரம் காரோட்டி இங்கு வந்துள்ளனர். சிலர் கென்டக்கியிலிருந்து வந்துள்ளனர். ஜார்ஜியாவிலுள்ள டிஃப்டன் என்னுமிடத்திலிருந்து சகோ. வெல்ஷ் இவான்சும் அவருடைய குடும்பத்தினரும் வந்துள்ளதைக் காண்கிறேன். கலிபோர்னியாவிலிருந்து வந்துள்ளோரை நான் வெளியே சந்தித்தேன். ஜெர்மனியிலிருந்தும் மற்றும் வெவ்வேறு இடங்களிலிருந்தும் சிலர் வந்துள்ளனர். கர்த்தரைச் சேவிப்பதற்கென இந்த சிறு இடத்திற்கு இவர்கள் அனைவரும் வந்துள்ளனர். நான் சகோதரி நெல்லிகாக்ஸைக் காண்கிறேன். அவளுடைய மாமியாரும் மற்றவர்களும் வந்துள்ளனர் என்று எண்ணுகிறேன். இப்படியாக இன்றிரவு பல மைல் தூரத்திலிருந்தும் கென்டக்கியிலிருந்தும், ஜார்ஜியாவிலிருந்தும், டென்னஸி, ஒஹையோ போன்ற இடங்களிலிருந்தும் என் நண்பர்கள் வந்துள்ளனர். இங்குள்ள என் நண்பர் சகோ. டெட்டட்லி, அரிசோனாவிலுள்ள பீனிக்ஸிலிருந்து இவ்வளவு தூரம் வந்துள்ளார். இன்னும் மற்ற அநேகர், அவர்கள் பெயரை என்னால் கூற முடியுமானால், இன்று நம்மை சந்திக்க வந்துள்ளனர். இவர்களில் தொண்ணூறு சதவிகிதம் மக்களுடன் என்னால் கையும் கூட குலுக்க முடியவில்லை. சிக்காகோவிலிருந்தும் சுற்றுப் புறங்களிலிருந்தும் என் நண்பர்கள் வந்துள்ளதைக் காண்கிறேன். இந்தப் பட்டினத்திற்கு வெளியேயிருந்து இங்கு வந்துள்ளோர் எத்தனை பேர். உங்கள் கைகளையும் உயர்த்துங்கள். கூட்டத்தில் தொண்ணூறு சதவிகிதம் இவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள வெவ்வேறு சபைகளைச் சேர்ந்த நண்பர்கள். 3இன்று காலை நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்து விட்டு, வியாதியஸ்தருக்காக ஒன்றரைமணி வரை ஜெபித்தேன். எனவே என் தொண்டை சிறிது கரகரப்பாயுள்ளது. எனவே, நாம் இரண்டாம் கியர் (Second gear) என்று சொல்லுகிறோமே. அதற்குள் பிரவேசிக்க நான் சிறிது நேரம் பிரசங்கம் செய்ய வேண்டும்.... அதோ சகோ. வேயில். அவருடைய கைகளை நான் குலுக்கவில்லை, என் கூட்டாளிகளில் ஒருவர் ஒஹையோவிலுள்ள பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவர். அது நீங்களா, சகோ. பென்? (சகோ. பென், ''ஆமென்“ என்கிறார் - ஆசி). நீங்கள் ''ஆமென்'' என்று சொல்வதை நான் இன்னும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் நீங்கள் வந்துள்ளதை அறிந்திருப்பேன். நீங்கள் எல்லாரும் சகோதரன் பென்னை அறிவீர்களா? அவர் இப்பட்டினத்திற்கு வெளியே சென்று விட்டார் என்று அறிவேன், ஆனால் எனக்கு என்ன தெரியாது என்றால்... சகோ. பென், இப்பொழுது எங்கு வசிக்கிறீர்கள்? (நல்லது சகோதரனே, ''நாங்கள் இந்தியானாவிலுள்ள பார்டனில் வசிக்கிறோம்'' - ஆசி). இந்தியானாவிலுள்ள பார்டனில். 4நீங்கள் ஒவ்வொருவரும் வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அதிக மைல்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதால், உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்கப் போவதில்லை. உங்கள் ஒவ்வொருவரையும் இன்றிரவு என் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல எனக்குப் பிரியம். நான் உண்மையாகவே இதை கூறுகிறேன். நான் விடியற்காலை மூன்று மணிக்கு, மூன்றிலிருந்து நான்கு மணிக்குள், வீட்டை விட்டுச் செல்ல வேண்டும். உங்களை வீட்டுக்குக் கொண்டு செல்ல முடிந்தால் நலமாயிருக்கும். அர்கன்சாசிலிருந்து வந்துள்ள என் நண்பரையும் அவருடைய மனைவியையும் காண்கிறேன். நீங்கள் தான் அந்த மனிதர் அல்லவா? அன்றொரு இரவு கர்த்தர் பேசி இவைகளை உரைத்தாரே? அது நீங்கள் தான் என்று நினைத்தேன். நான் சுற்றிலும் பார்க்கும் போது, புது நண்பர்களையும் பழைய நண்பர்களையும் காண்கிறேன். தேவன் என் இருதயத்தின் நினைவுகளை அறிவார். உங்கள் ஒவ்வொருவரையும் கண்டு, உங்களை என் வீட்டுக்குக் கூட்டிச் சென்று உங்களுடன் நன்றாக அளவளாவ எனக்கு அதிக வாஞ்சை. ஒருநாள் நாம் அவ்விதம் செய்வோம். அப்பொழுது, ''நான் வேகமாக செல்ல வேண்டும். போய் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். ஒருவர் வியாதியாயிருக்கிறார், என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டிய அவசியமிராது. அந்த மகத்தான நாளில் இவையனைத்தும் முடிவடைந்திருக்கும். நாம் இன்னும் பலமுறை சந்திப்போமென நம்புகிறேன். 5நான் கர்த்தருக்காக காத்திருக்கும் இவ்வேளையில், நான் எப்பக்கம் செல்ல வேண்டும் என்று அறிந்து கொள்வது என் நோக்கமாயுள்ளது. செவ்வாய் அன்று, என் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு எனக்கு ஜெபம் தேவைப்படும். நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா என்று உங்களை நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன். (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) எனக்கு உங்கள் ஜெபம் தேவை. எனக்காக ஜெபிக்க நிச்சமுடையவர்களாயிருங்கள். செவ்வாயன்று எப்பக்கம் காற்றடிக்கிறது என்பது எனக்கும், சபைக்கும், கிறிஸ்துவின் நோக்கத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே, எனக்காக ஜெபிக்க நிச்சயமுடையவர்களாயிருங்கள். 6நான் எப்பக்கம் செல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளும் வரைக்கும் கர்த்தருடைய சமுகத்தில் காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்விதம் காத்திருக்கும் இந்நேரத்தில், நான் இந்த கூடாரத்துக்கு வந்து, பிரசங்கித்து, வியாதியஸ்தருக்காக ஜெபித்து, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பேன். அரசாங்கம் நம்மை தடுத்து நிறுத்தாமல் போனால், என்றாகிலும் ஒரு நாள் இங்கு ஒரு நல்ல சபை கட்டிடம் கட்ட விரும்புகிறோம் - எல்லோரும் உட்கார இடவசதி, சிறப்பு தரை, தாழ்வாரம் கொண்ட, குளிர் சாதன வசதி, ''ஏர்கன்டிஷன்'' பொருத்தப்பட்ட ஒரு உண்மையான நல்ல சபைக் கட்டிடம், அங்கு ஜனங்கள் செளகரியமாக உட்கார்ந்து, ஆராதனைகளைக் கேட்கலாம் - அவர்கள் நம்மை அனுமதித்தால். அவர்கள் அனுமதிப்பார்களென நம்புகிறேன். எங்களுக்காக ஜெபியுங்கள். 7கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு நான் பேசப் போவதாக இன்று காலை நான் வாக்களித்த பொருளை இப்பொழுது அணுகி, அதன் பேரில் இன்றிரவு பேசப் போகிறோம். அது என் குரலின் காரணமாக, ஏறக்குறைய போதித்தலாக இருக்கும். இன்றிரவு நான்: ''ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையின் ஐந்து உறுதியான அடையாளங்கள்.'' உண்மையான சபையின் ஐந்து நிரூபணங்கள் அல்லது அடையாளங்கள் என்பதைக் குறித்து பேச விரும்புகிறேன். 8இந்த பெரிய, மகத்தான பொருளை நாம் அணுகும் முன்னர் நான் ஜெபம் செய்யும்படி கேட்கப் போகிறேன். நம்முடைய போதகர் சகோ. நெவில் இங்கு வந்து தேவனுடைய வார்த்தையின் மேல் ஜெபம் ஏறெடுக்கும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன். ஆறுதலின் ஜெபத்தை ஏறெடுக்க சகோ. நெவில் முன்னால் வந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் அனைவரும் பரி. மத்தேயு 16ம் அதிகாரம் 18ம் வசனத்திற்கு நம்முடைய வேதாகமத்தைத் திருப்புவோம். (சகோ. நெவில் ஜெபிக்கிறார் - ஆசி.) இந்த ஒலிபெருக்கியின் சத்தம் இவ்வளவுதானா (யாரோ ஒருவர் பரவாயில்லை என்கிறார் - ஆசி) இதுதான் ஒலிபெருக்கியா, (அவை இரண்டும் சரியான ஒலிபெருக்கியா? உங்களுக்கு நன்றாக கேட்கிறதா? பின்னால் உள்ளவர்களே, உங்களால் நன்றாக கேட்க முடிகிறதா (''ஆமென்'') சரி, நல்லது. 9இப்பொழுது மத்தேயு புத்தகத்திலிருந்து, 16ம் அதிகாரத்திலுள்ள 18ம் வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் 17ம் வசனத்திலிருந்து தொடங்குகிறேன்: “இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.” மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத். 16 : 17-18. தேவன் தாமே தமது வார்த்தையுடன் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 10இன்றிரவு நான் பேசும்படியாக தெரிந்து கொண்டுள்ள இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் சபை என்னும் சொல்; அவைகளில் ஒன்று என்னவெனில், சபை என்றால் என்ன? அதை நிறுவினது யார்? அதன் செய்தி என்ன? நாம் எவ்விதம் அதன் அங்கத்தினராக முடியும்? அதன் அங்கத்தினராய் இராமலே நாம் பரலோகம் செல்ல முடியுமா? என்பதாம். இந்த பொருள்கள் ஒவ்வொன்றும் மணிக்கணக்காகும். ஆனால் உண்மையான சபை என்னவென்று காண்பிக்க ஒருசில அடிப்படை குறிப்புகள் மாத்திரம் எடுத்துரைக்க விரும்புகிறேன். உங்கள் வேதாகமங்களை நீங்கள் வைத்திருங்கள். 11சபை என்னும் சொல் முதற்கண், “வெளியே அழைக்கப்பட்டோர்'' என்று பொருள்படும். இஸ்ரவேலர் எகிப்தில் இருந்த வரைக்கும் தேவனுடைய சபையாக இருக்கவில்லை. அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தனர். தேவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்த போது அவர்கள் வெளியே அழைக்கப்பட்டவர் என்னும் காரணத்தால், தேவனுடைய சபையாக மாறினர். அது இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. சபை என்னும் சொல், வெளியே அழைக்கப்பட்டோர் என்று பொருள்படும் - வெளியே அழைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, வித்தியாசமாக்கப்பட்டவர்கள். 12பழைய ஏற்பாட்டில் சபையானது தேவனுடைய ராஜ்யம் என்றழைக்கப்பட்டு அவ்விதம் அறியப்பட்டது. நான் இதை வேதாகம அட்டவணையிலிருந்து (chronology) எடுத்துரைக்கிறேன். பழைய ஏற்பாட்டில் சபையானது, ''தேவனுடைய ராஜ்யம்'' என்றழைக்கப்பட்டது. வேறு விதமாகக் கூறினால், தேவன் ராஜா, சபை அவருடைய ராஜ்யம் - தேவனுடைய ராஜ்யம், பழைய ஏற்பாட்டில். புதிய ஏற்பாட்டில் அது, ''மேசியாவுக்குரிய சாம்ராஜ்யம்“ என்றழைக்கப்படுகிறது. ஓ, அது எனக்கு மிகவும் பிரியம், மேசியாவுக்குரிய வேறு விதமாகக் கூறினால் அது ''மேசியாவின் சாம்ராஜ்யம்.'' அந்த சாம்ராஜ்யத்தில் மேசியா ஆளுகை செய்து அரசாட்சி செய்கிறார். எந்தவிதமான ஸ்தாபனதடைகளும் இல்லை, மேசியா தமது சாம்ராஜ்யத்தில் அரசாட்சி செய்கிறார். அது மிகவும் அருமையான கருத்து அல்லவா? மேசியாவுக்குரிய சாம்ராஜ்யம்! எனவே சபையானது ஒரு ஸ்தாபனம் அல்ல, சபையானது ஜனங்கள் ஒன்று கூடுவதல்ல. சபை என்பது வேறொரு ராஜ்யத்தில் சேவிப்பதற்கென உலகத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்ட தேவனுடைய ஜனங்களாம். 13இது எடுத்துக்கூற தகுதி வாய்ந்தது. சில மாதங்களுக்கு முன்பு நானும் மனைவியும் அங்காடிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்கள் விசித்திரமான ஒன்றைக் கண்டோம். அதாவது தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்தீரி பாவாடை அணிந்திருந்தாள். சரி, நீங்கள் நம்பமாட்டீர்கள், ஆனால் நாங்கள் உண்மையில் ஒருத்தியைக் கண்டோம். என் மனைவி என்னிடம் அதைப் பாருங்கள்'' என்றாள். நான், ''அவள் ஒரு கிறிஸ்தவளாயிருக்க வேண்டும். அவள் மிகவும் வித்தியாசமானவளாயிருக்கிறாள்'' என்றேன். அது பெருத்த அவமானம். அப்பொழுது என் மனைவியிடமிருந்து இக்கேள்வி எழுந்தது. அவள், ''ஏன், பில், கிறிஸ்தவர்களாகிய நாம் நமது பெண்கள் இவ்விதம் ஆடை அணிந்து நடந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்? மற்ற சபைகளிலுள்ள மக்கள் இத்தகைய ஒழுக்கங்கெட்ட ஆடைகளை அணியக் காரணம் என்ன? அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று நீங்கள் கூறமாட்டீர்கள் அல்லவா?'' என்று கேட்டாள். நான், ''அது உண்மை தான். நான் யாரையும் நியாயந்தீர்க்க முடியாது. ஆனால் அவர்களைக் காணும் போது, அவர்களுடைய கனிகளினால் அவர்கள் அறியப்படுகின்றனர். அவர்கள் உண்மையில் இந்த குற்றத்தை செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மேல் ஒரு ஆவி தங்கியுள்ளது. அது இவர்களை ஒழுக்கங்கெட்ட தன்மைக்கு விரட்டுகிறது“ என்றேன். 14இயேசு, “ஓரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று என்றார். விபசாரஞ் செய்த குற்றத்திற்காக பாவி பதில் சொல்ல வேண்டிய நேரத்தில்,உண்மையில் குற்றவாளி யார்? தன்னை அவ்வகையில் காண்பித்த அந்த ஸ்திரீயே. கற்பைப் பொறுத்த வரையில் நீங்கள் லீலிப்புஷ்பத்தைப் போல் தூய்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒழுக்கங்கெட்ட வழியில் உங்களை ஜனங்களுக்கு முன்பாக காண்பிக்கும் போது, நீங்கள் உடலுறவு செயலில் ஈடுபடாமலிருந்தாலும், ஒரு மனிதன் உங்களைக் குறித்து பொல்லாத நினைவுகள் கொள்வதற்கு நீங்கள் காரணமாயிருந்தீர்கள், ஆகையால் தவறு உங்களுடையதே. ''நீங்கள் விபசாரக் குற்றத்தை புரிந்தவராவீர்கள்'' என்று இயேசு கூறினார். விபசாரக்காரி பரலோக ராஜ்யத்தில் பிரேவசிக்க மாட்டாள். 15நான் உலகம் சுற்றிப் பிரயாணம் செய்கையில், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த ஆவியைக் கொண்டுள்ளது என்பதைக் காண்கிறேன். நாடுகள் அனைத்துமே பிசாசின் கட்டுக்குள் உள்ளன. அரசாங்கங்கள் அனைத்துமே பிசாசினால் ஆளப்படுகின்றன. வேதம் அவ்விதம் உரைக்கின்றது. அவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர், போரில் ஈடுபடுகின்றனர். இயேசு வரும் வரைக்கும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். பிறகு அவர் வந்து ராஜ்யத்தை ஸ்தாபித்த பிறகு யுத்தம் இருக்காது. சாத்தான் இயேசுவின் முகத்தை நோக்கி, உலகின் ராஜ்யங்கள் அனைத்தும் அவனுடைய தென்றும், அவன் விருப்பப்படி அவைகளுக்கு அவன் எதையும் செய்யலாம் என்றும் கூறினான். இவையனைத்துமே சாத்தானின் கருவிகளாக, சாத்தானின் ராஜ்யங்களாக அமைந்துள்ளன. சாத்தான் இயேசுவிடம், ''நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்'' என்றான். ஆயிரம் வருட அரசாட்சியில் இந்த ராஜ்யங்கள் தமக்குச் சொந்தமாகி விடும் என்று இயேசு அறிந்திருந்தார். ஆகவே அவர், ''அப்பாலே போ சாத்தானே“ என்றார். தேவன் எல்லா ராஜ்யங்களையும் அவருக்குக் கொடுப்பார் என்றும், அவை அவருக்குச் சொந்தமாகி விடும் என்றும், இவையனைத்தும் ஒரே ராஜ்யமாகி விடும் என்றும் இயேசு அறிந்திருந்தார். 16நீங்கள் ஜெர்மனிக்குச் செல்லும் போது, ஜெர்மனிய ஆவியைக் காண்கிறீர்கள். நீங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் போது, இங்கிலீஷ் ஆவியைக் காண்கிறீர்கள். நீங்கள் ஸ்வீடனுக்குச் செல்லும் போது, ஸ்வீடிஷ் ஆவியைக் காண்கிறீர்கள். நீங்கள் பிரான்சுக்குச் செல்லும் போது, பிரெஞ்சு ஆவியைக் காண்கிறீர்கள். நீங்கள் அமெரிக்காவுக்கு வரும் போது, அமெரிக்க ஆவியைக் காண்கிறீர்கள். சில நாட்களுக்கு முன்பு, இறந்தோரை அடக்கம் செய்திருந்த நிலத்தடி சமாதியை (catacomb) காண, ரோமாபுரியிலுள்ள சான் ஆஞ்சலோவுக்குச் சென்றிருந்தேன். அங்கு உட்பிரவேசிக்கும் வாசலுக்கு முன்னால், அமெரிக்கப் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள். உள்ளே பிரவேசிப்பதற்கு முன்பு தயவுகூர்ந்து ஆடைகள் அணிந்து இறந்தோருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு நான் வியந்தேன். அமெரிக்கா என்னும் முறையில் அது எனக்கு ஒரு கடிந்து கொள்ளுதலாக இருந்தது. ஒரு நாடு அவ்வளவு தாழ்வான நிலையை அடைவதென்பது மிகவும் பயங்கரமானது. எனவே பாருங்கள், ஏனெனில்.... 17ஒரு முறை நான் ஒரு ஸ்திரீயைப் பார்த்து, ''நீ கிறிஸ்தவளா?'' என்று கேட்டேன். அவள், ''நான் ஒரு அமெரிக்கன், நிச்சயமாக அப்படித் தான்'' என்று பதிலளித்தாள். இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஒரு இரவு சகோ. பாஸ்வர்த் ஒருத்தியிடம், ''சகோதரியே, நீ கிறிஸ்தவளா?“ என்று கேட்டார். அதற்கு அவள், “நான் செய்கிறதை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு இரவும் நான் மெழுகுவர்த்தி எரிக்கிறேன்” என்றாள் - மெழுகுவர்த்தி எரிப்பதற்கும் கிறிஸ்தவ மார்க்கத்துக்கும் தொடர்பு உள்ளது போல கிறிஸ்தவ மார்க்கம் அப்படிப்பட்ட காரியங்களை கொண்டதல்ல. தேவனுடைய சபை இப்படிப்பட்ட வேஷமான செயல்களைக் கொண்டதல்ல. 18அந்த ஸ்திரீகளை அவ்விதம் செய்யத் தூண்டுவது.... ஸ்திரீகள் அவ்விதம் செய்ய வேண்டுமென்று நாம் கட்டாயப்படுத்துவதில்லை. நம்முடைய மனிதர் மது அருந்தக்கூடாது, சபிக்கக்கூடாது என்று நாம் கட்டாயப்படுத்துவதில்லை. நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வேதத்தின் அம்சங்களை எடுத்துக் கூறுகிறோம். பெந்தெகொஸ்தேயினரின் விசுவாசத்துக்கும் பரிசுத்தரின் விசுவாசத்துக்கும் வரும் அநேக ஆண்கள் அவ்விதம் உள்ளதாக பாவனை செய்கின்றனர், ஆனால் அவர்களுடைய இருதயங்களில் மாறுதல் எதுவுமில்லை. அநேக பெண்களும் அப்படியே. அவர்கள் இப்படி செய்ய வேண்டுமென்று நாம் அவர்களிடம் கூறுவதில்லை. நாம் வேதத்தில் காணப்படும் அம்சங்களைக் கூறுகிறோம். வேதம் உரைப்பது என்னவென்று அவர்களுக்கு எடுத்துரைக்கிறோம். அவர்கள் பரலோகத்தின் ஆவியினால் பிறந்தவர்களாயிருந்தால், அவர்களுடைய ஆவி அமெரிக்க ஆவியாகவோ, ஜெர்மானிய ஆவியாகவோ இராமல், தேவனுடைய ராஜ்யத்துக்கென்று பரலோகத்தின் ஆவியாக உள்ளது. ஏனெனில் நாம் வேறொரு ராஜ்யத்தில் - தேவனுடைய ராஜ்யத்தில் - இருக்கிறோம். அங்கு நாணயம், பரிசுத்தம், வல்லமை உள்ளது. 19நமது ராஜாவிடம் செல்ல நமக்கு வழியுண்டு. அவரை சந்திக்க நாம் விரும்பும் போதெல்லாம் அவரை நாம் சந்தித்து உரையாடுகிறோம். நமக்கும் ராஜாவுக்கும் இடையில் பரிந்து பேசுபவர், மத்தியஸ்தர் எவருமில்லை, அந்த ஒரு மனிதன் கிறிஸ்து இயேசுவைத் தவிர. எனவே நாம் ஒரு ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது வேத அட்டவணையில், ''மேசியாவுக்குரிய ராஜ்யம்'' என்றழைக்கப்படுகிறது. வேறு விதமாகக் கூறினால், மேசியா தமது ராஜ்யத்தில் அவருடைய ஜனங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி அவர்களை அரசாளுகிறார். அவர் ஒவ்வொரு துறையிலிருந்தும் ஜனங்களை வெளியே அழைத்து, அவர்களை ஒரு கூட்டமாகக் கூட்டி, அதை, ''தமது சபை அல்லது வெளியே அழைக்கப்பட்டவர்கள் என்றழைக்கிறார்.'' அது அழகான செயல் அல்லவா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) 20இஸ்ரவேலர் தேவனுடைய ஜனங்களாய் இருந்தனர் (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அதை நாம் அப். 7:38ல் காண்கிறோம்). அதன் பிறகு அவர்கள் தேவனுடைய சபை என்றழைக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் தேவனால் எகிப்திலிருந்து, உலகத்திலிருந்து, மற்ற மார்க்கங்களிலிருந்து, தேவனுடன் தனிமையில் நடக்க அழைக்கப்பட்டனர். இன்று தேவனுடைய சபையும் அவ்வாறேயுள்ளது. அது உலகத்தின் எல்லாவற்றிலிருந்தும், ஒவ்வொரு மார்க்க கொள்கையினின்றும், ஒவ்வொரு மார்க்க ஸ்தாபனத்தினின்றும் தேவனுடன் நடக்க வெளியே அழைக்கப்பட்டுள்ளது. அது பேராயரால் ஆளப்படாமல், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மேசியாவின் ராஜ்யத்தில் கிறிஸ்துவினால் ஆளுகை செய்யப்படுகிறது. கிறிஸ்துவே நமது ராஜா. கிறிஸ்து ஒருவர் மாத்திரமே. 21கிறிஸ்துவே இதன் தலைவராயிருக்கிறார், கிறிஸ்துவே இந்த மேசியாவின் ராஜ்யத்துக்கு தலைவராயிருக்கிறார். கிறிஸ்து தலைவராயுள்ள ராஜ்யத்தை நீங்கள் ஸ்தாபனமாகச் செய்ய முடியாது. ஏனெனில் கிறிஸ்துவே ராஜா. மனிதனின் அறிவுத்திறனைக் கொண்டு நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டால், கிறிஸ்து அதை ஆளுகை செய்ய முடியாது. எனவே எந்த ஸ்தாபனமும், எந்த ஜனங்களும், எந்த மனிதக்குழுக்களும் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபனமாக்க முனைந்தால், அவர்கள் ராஜாவுக்கு மாறாக செயல்படுகின்றனர். அவர்கள் ராஜாவுக்கு மாறாக புரியும் எந்த செயலும் ராஜாவுக்கு விரோதமாக அமைந்திருக்கும். ராஜாவுக்கு விரோதமாக இருக்குமானால், அது அந்திக்கிறிஸ்துவாகும். அது மிகவும் கடினமான சொல். என்னால் சற்று அதிக சப்தமாக பேச முடிந்தால், அது இன்னும் தெளிவாயிருக்கும். அது அந்திக்கிறிஸ்து. நீங்கள் என்னுடன் சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்வீர்களானால், அதை நிரூபித்துக் காண்பிக்கிறேன். அந்திக்கிறிஸ்துவின் ஆவி ஜனங்களை ஒரு ஸ்தாபனத்திலிருந்து மற்றொரு ஸ்தாபனத்துக்கு அழைத்து, அவர்களை ஒரு ஸ்தாபனமாக ஒன்று சேர்க்கிறது. அது ஒருபோதும் தேவனுடைய சித்தமாய் இருக்கவில்லை. நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாக கடினமாகத் தாக்குவதால், ஜனங்கள் என்னை எப்பொழுதும் பழிக்கின்றனர். அதிலுள்ள ஜனங்களை நான் தாக்குவதில்லை. அது, “நாங்கள் தான் அந்த ஜனங்கள்” என்று ஜனங்களை நினைக்க வைக்கும் அந்த அதிகாரம் செலுத்தும் ஆவியே! 22தேவனுடைய ஜனங்கள் அவரால் அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் இருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கத்தோலிக்கராய் இருக்கலாம், பிராடெஸ்டெண்டுகளாக இருக்கலாம். யூதர்களாய் இருக்கலாம், எந்த ஒரு சபையும் சேர்ந்திருக்கலாம். ஆனால் உண்மையான சபை இயேசு கிறிஸ்துவின் காணகூடாத சரீரமே . நீங்கள் கிறிஸ்துவின் காணக்கூடாத சபையை ஸ்தாபனமாகச் செய்துவிட முடியாது. கிறிஸ்துவினிடம் வரும் ஒவ்வொரு நபரும் (உலகத்தை விட்டு வெளி வந்து கிறிஸ்துவினிடம் வருபவர்), அவருடைய காணக்கூடாத சரீரத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, இந்த சபைக்குள் வரும்போது, அந்த சரீரத்தின் அங்கத்தினராகி விடுகின்றீர்கள். உங்களுக்கு விளங்குகிறதா மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினர், நசரின், யாத்திரீக பரிசுத்தர், கத்தோலிக்கர் அல்ல, இயேசு கிறிஸ்துவின் சரீரம். இன்னும் சில நிமிடங்களில் மற்ற கேள்விகளுக்கு நாம் விடையளிக்கும் போது, அதை நாம் சற்று ஆழமாக பார்ப்போம். கிறிஸ்துவின் சரீரம் என்பது சபையாகும். 23இப்பொழுது, அவர் அநேக உவமைகளில், அதை கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுக்கு ஒப்பிடுகிறார். அவர் சபையை ''மணவாட்டி'' என்றழைக்கிறார். மணவாட்டியும் மணவாளனும் இனி இருவர் அல்ல, ஒருவரே. அவள் அவர் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். ஒரு மனிதன் அல்லது ஒரு ஸ்திரீ, பரிசுத்த ஆவியினால் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரத்துக்குள் அழைக்கப்படும் போது, அவர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்று, அவருடைய சரீரத்தின் முழு அங்கத்தினராகின்றனர். ஏனெனில் தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்த ஆவியை எடுத்துக் கொண்டு, அவருடைய சரீரத்தை உயிரோடெழுப்பி, அவருடைய சிங்காசனத்தில் வைத்து, காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரத்தை உருவாக்க பரிசுத்த ஆவியை அனுப்பினார். அது கர்த்தருடைய வருகையின் போது, கலியாண விருந்தில் இணையும். இதை நீங்கள் ஸ்தாபனமாகச் செய்ய முடியாது. இது ஒரு பரம ரகசியம். 24இயேசு, நிக்கொதேமுவிடம், காற்றானது தனக்கு இஷ்டமான இடத்தில் வீசுகிறது. அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்கு தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்'' என்றார். உங்களால் அதை புரிந்து கொள்ள இயலாது. அது எங்கிருந்தோ வருகிறது. அது மெதோடிஸ்டு அல்ல, பாப்டிஸ்டு அல்ல, பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அல்ல, வேறெந்த ஸ்தாபனமும் அல்ல. அது ஒரு பிறப்பு, தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிறத்தல். அதை ஸ்தாபனமாகச் செய்ய முயற்சி செய்தல் அதை அந்திக்கிறிஸ்துவினிடம் கொண்டு வந்து விடுகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமான எதுவும் அந்திக்கிறிஸ்துவாயுள்ளது. 25அப்படியானால் இந்த ஸ்தாபனம் எங்கு துவங்கினது? இயேசு இவ்வுலகில் இருந்த போது, அவர் எந்த ஸ்தாபன சபையும் ஏற்படுத்தவில்லை. ஒரு வருகின்ற சபையைக் குறித்து அவர் பேசினார். கடைசி அப்போஸ்தலனுடைய மரணத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரைக்கும், ஸ்தாபன சபை எதுவும் இருக்கவில்லை. பூமியில் உண்டான முதலாம் ஸ்தாபன சபை ரோமன் கத்தோலிக்க சபையே. என்னிடம் நிசாயாவுக்கு முன்பிருந்த பிதாக்கள், ஃபாக்ஸ் எழுதிய இரத்தசாட்சிகளின் புத்தகம், யோசிபஸ் எழுதிய வரலாற்றுப் புத்தகங்கள், பெம்பர் எழுதிய ஆதி காலங்கள், இன்னும் பண்டைய காலத்து எழுத்தாளர்கள் எழுதின புத்தகங்கள் உள்ளன. அந்த வரலாற்றுப் புத்தகம் எவற்றிலும் ரோமன் கத்தோலிக்க சபைக்கு முன்பு ஒரு ஸ்தாபன சபை இருந்ததாக குறிப்பிடவில்லை. ரோமன் கத்தோலிக்க சபை ஸ்தாபனமானது. அது தேவனுக்கு முரணாக இருந்தது. அப்படிப்பட்ட ஒன்று வந்து கொண்டிருக்குமானால்.... ஓ, இதை உங்களுக்கு என்னால் புரியவைக்க முடியுமானால் நலமாயிருக்கும். அப்படிப்பட்ட மகத்தான அந்திக்கிறிஸ்துவின் செயல் ஒன்று வந்து கொண்டிருக்குமானால், முடிவற்ற தேவன் அதை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் அல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அவர் முடிவற்றவர் ஆயிற்றே, அப்படியிருக்க இது வந்து கொண்டிருக்கிறதென்று அவர் அறிந்திருக்க வேண்டாமா? இது பயங்கரமான ஒரு காரியமாக இருக்குமானால், அவர் சபையை முன்கூட்டியே எச்சரித்திருக்கமாட்டாரா? (''ஆமென்'') நான் ஏன் ஸ்தாபனங்களையும் அவைகளின் போக்கையும் தாக்குகிறேன் என்று - ஸ்தாபனங்களில் உள்ள ஜனங்களை அல்ல - இப்பொழுது நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். அவை ஒவ்வொன்றும் அந்திக்கிறிஸ்துவேயன்றி வேறல்ல. 26இப்பொழுது நீங்கள், “ஒரு நிமிடம் பொறுங்கள், நீங்கள் வேதத்தைத் தவிர வேறொன்றும் பிரசங்கிப்பதில்லை என்று எண்ணியிருந்தேன்'' எனலாம். வேதம் அதைக் கூறும்படி நாம் செய்யலாம். இப்பொழுது நாம் வேதத்தைத் திருப்பி, சற்று நேரம் படிப்போம். என்னுடன் கூட வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்துக்கு வேதத்தைத் திருப்புங்கள். இது இயேசுகிறிஸ்து தமது சபைக்கு, வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு, தம்மை வெளிப்படுத்தலாகும். வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம். இதை கூடுமான வரைக்கும் வேகமாக படிப்போம். இப்பொழுது நாம் படிக்கும் போது கவனியுங்கள்: ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி. நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசிக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி. இப்பொழுது, இதெல்லாம் அடையாளங்களினால் எழுதப்பட்டுள்ளது, ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துதல், இது முத்தரிக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்குத் தெரியுமா? இது மறைக்கப்பட்டுள்ள ஒரு காரியம், இது வெளிப்படும் ஒரே வழி.... இது நுண்ணறிவு சிந்தையினால் அல்ல, ஆனால் ஆவியின் வரங்களின் மூலம் பரிசுத்த ஆவியால் வெளிப்பட வேண்டும். புத்தியுடையவன் அந்த மிருகத்தின் இலக்கத்தைக் கணக்குப் பாக்கக்கடவன். புத்தியுடையவன், ஞானத்தின் வரத்தைப் பெற்றவன் இதை செய்யக்கடவன், அதை செய்யக்கடவன். இது ஒரு வெளிப்பாடு. 27வேதத்தில் ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள் என்பது எவரும் அறிந்ததே. கிறிஸ்துவின் சபை “மணவாட்டி'' என்றழைக்கப்படுகிறது. பவுல், நான் உங்களைக் கற்புள்ள கன்னிகைகளாக கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கிறேன்” என்கிறான். இங்கு நாம் பெயர்கெட்ட ஒரு மகாஸ்திரீயைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். தூதன் யோவானிடம், ''நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசிக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்,'' என்றான். ''திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற ஸ்திரீ'' என்பது மர்மமாக ஒலிக்கும். ஆனால் அதற்கான விளக்கம் இங்கே உள்ளது. வேதம் அதை விளக்குகிறது. இப்பொழுது நாம் 15ம் அதிகாரத்துக்கு இல்லை, அதே அதிகாரத்தின் 15ம் வசனத்துக்கு - வேதத்தைத் திருப்புவோம். அப்பொழுது ''தண்ணீர்கள்'' என்றால் அர்த்தம் என்னவென்பதை அறிந்து கொள்வீர்கள். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே: அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். 28எனவே அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற தண்ணீர்கள் அவள் கட்டுக்குள் இருக்கும் ஜாதிகள், ஜனங்கள், கூட்டங்கள், பாஷைக்காரர் ஆகியோரைக் குறிக்கின்றது. ஒரு பெயர்கெட்ட ஸ்திரீ இவள். அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறாள். ஒரு பெயர்கெட்ட ஸ்திரீ. அவ்வாறு ஒரு ஸ்திரீ உலகப்பிரகாரமாக அழைக்கப்படுவாளானால்- அவள் தன் கணவனுக்கு உண்மையாயிராதவள் என்று நாம் அறிந்திருக்கிறோம். அப்படித்தான் அவள் அழைக்கப்படுவாள். அவள் ஒரு மனிதனுக்கு உண்மையாக வாழ்வது போல் நடித்து, உண்மையில் அவனுக்கு உண்மையாக இல்லாமல் வாழ்கிறாள். அது சரியா? நல்லது, இந்த சபையும் கிறிஸ்து அவளுடைய புருஷன் என்று சொல்லிக் கொண்டு அவளுடைய உபதேசம் அவருடைய போதனைக்கு முரணாக அமைந்துள்ளது. அவள் ஒரு வேசி. அவள் ஜனங்களையும் கூட்டங்களையும், ஜாதிகளையும் அவளுடைய ஆதிக்கத்தில் கொண்டிருக்கிறாள். ''நீ வா, அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன். இப்பொழுது காட்சி நமக்கு தெளிவாகிவிட்டது. 29...மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனங்கள் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே. வேசித்தனம் என்றால் என்ன? ''அசுத்தம், அசுத்தமாயிருத்தல்.'' அவள் ஒரு வேசி. அவளிடம் அசுத்தம் உள்ளது. உலகத்திலுள்ள ஐசுவரியவான்களும், ராஜாக்களும், தேசத்திலுள்ள பெரிய மனிதர்களும் அவளுடன் வேசித்தனம் பண்ணி, அவளுடைய பொல்லாங்கில் பங்கு கொண்டனர். அது எங்கு வந்தடைகிறது என்பதை காண்கிறீர்கள் அல்லவா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பார்த்தீர்களா? 30இதை எழுதினதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் இதைப் போதிக்காமலிருந்தால், அதற்கு நான் பொறுப்பாளியாகிவிடுவேன். நாம் சபையைக் குறித்து இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறோம் - நாம் இன்னும் தொடர்ந்து படிக்கும் போது, இதை கவனியுங்கள்: ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது... சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரி ஏறியிருக்கக் கண்டேன். நாம் தொடர்ந்து செல்லும் போது, இந்த அடையாளங்களை விளக்க விரும்புகிறேன். சிவப்பு ஒரு வகையில் நல்ல நிறம். ஆனால் மற்றொரு வகையில் அது பெயர்கெட்ட நிறம் - சிவப்பு வெளிச்சம். ஆபத்தான நிறம், சிவப்பு நிறம். அவள் சிவப்பு நிறத்தால் சிங்காரிக்கப்பட்டிருந்தாள். சிவப்பு, வேசி. அவள் மிருகத்தின் மேல் ஏறியிருந்தாள். வேதத்தில் ''மிருகம்'' ''வல்லமையைக் குறிக்கிறது.'' நீங்கள் கவனிப்பீர்களானால், இங்குள்ள அநேக போதகர்கள் தலையசைத்து ஆமோதம் தெரிவித்ததைக் காண்கிறேன். ஏனெனில் அவர்கள் வேத போதகர்கள். மிருகம் வல்லமையைக் குறிக்கிறது. இந்த மிருகங்களை நாம் வேதத்தில் காண்கிறோம். வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரம், தானியேலின் புத்தகம், மிருகம் தண்ணீரிலிருந்து எழும்பி வருகிறது. மிருகங்கள், வல்லமைகள், ஜனங்களின் மத்தியிலிருந்து எழும்பி வருகின்றன. 31ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறிக்கும் வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மிருகம் ஒன்று மட்டுமே, தண்ணீர்களிலிருந்து எழும்பிவராத மிருகம். அது பூமியிலிருந்து எழும்பி வருகிறது. ஜனங்கள் இல்லாத இடத்திலிருந்து. அது தான் இந்த புது ராஜ்யமாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள். அது காண்பதற்கு ஆட்டுக்குட்டியைப் போலிருந்தது. ஆனால் சிறிது கழிந்து அது வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. அது தான் இந்த தேசம். அது நடந்தேயாக வேண்டும். ஒரு யோசேப்பு எழும்புவான்... இல்லை,யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் எழும்புவான். அவர்கள் முன்பு முயன்றனர், அவர்கள் இம்முறை தோல்வியுற நேர்ந்தால் அதை மறுபடியும் செய்வார்கள். அது முடிவில் நேர்ந்தால் அதை மறுபடியும் செய்வார்கள். அது முடிவில் வரும், வேதம் அவ்விதம் உரைத்துள்ளது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல, இருசாராருமே நேர்மையற்றவர்கள். என் வாக்கை (Vote) நான் இயேசு கிறிஸ்துக்கே போடுகிறேன். அவர் ஒருவரில் மாத்திரமே நான் சிரத்தை கொண்டுள்ளேன். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது சுதந்தரம் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்த்தால், இப்பொழுதுதே உங்கள் மூக்கு கண்ணாடியைத் துடைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு அருகிலுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஜெபம் செய்யுங்கள்! சரி. 32(என்ன இருந்தது?) ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரி (சபை) ஏறியிருக்கக் கண்டேன். ''ஏழு தலைகள்''. நீங்கள் அந்த அதிகாரத்தில் கீழே படித்தால் மிருகத்தின் அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ''ஏழு மலைகளாம்'' என்று எழுதப்பட்டுள்ளது. (9ம் வசனம்). எந்த நகரம் ஏழு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது? ரோமாபுரி, முற்றிலுமாக, ஏழு மலைகளின்மேல் கட்டப்பட்ட நகரம். ஒரு சபை, ஒரு ஸ்திரீ, ஒரு வேசி அவளுடைய வல்லமையினால் உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டிருக்கிறாள். ஏன், இது செய்தித்தாள் படிப்பது போல் அவ்வளவு தெளிவாயுள்ளது. பாருங்கள்? நிச்சயமாக. 33இப்பொழுது... அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, (ஸ்திரீ, சபை, ஐசுவரியமுள்ளவள்) பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு.... அவர்கள் ஒருவராவது வருமானவரி செலுத்துகிறார்களா என்று எனக்குக் கூறுங்கள். எதன் மேலாவது அவர்களுக்கு வரிவிதிக்கப்படுகிறதா என்று எனக்குக் கூறுங்கள். அவர்கள் நேரடியாக எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். இருப்பினும், தேவனுடைய பிள்ளைகள் அதில் உள்ளனர், நிச்சயமாக உள்ளனர். குடம் கெண்டியை கறுப்பு என்று அழைக்க முடியாதது போல, அநேகமுறை பிராடெஸ்டெண்டுகள், ''நல்லது, கத்தோலிக்கர் இதை, அதை, மற்றதை கொன்று போட்டனர்“ என்கின்றனர். ஜோசப் ஸ்மித்தை கொன்றது யார்? அவருடன் நான் இணங்குவதில்லை, ஆனால் அமெரிக்காவில் எனக்குப் போதிக்க எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை அவருக்கும் போதிக்க இருந்தது. மெதோடிஸ்டு சபை ஜோசப்ஸ்மித்தை கொலை செய்தது. நீங்கள் சால்ட் லேக் பட்டினத்துக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே, ''மெதோடிஸ்டே, மார்மோன் பூச்சிகளைக் குறித்து கவனமாயிரு” என்று எழுதப்பட்ட பெரிய பலகை தொங்கவிடப்பட்டுள்ளது. மெதோடிஸ்டு சபை, ஜோசப் ஸ்மித்தை சுட்டுக்கொன்றது. பிராடெஸ்டெண்டுகள் எனவே கத்தோலிக்கரைக் குறித்து சந்தடி செய்ய வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் வேதம் இவர்களையும் குறித்து கூறுவதை கவனியுங்கள். 34...இரத்தினங்களினாலும்... முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள் (அவள் மற்றவர்களுக்கு அளித்த உபதேசங்கள்). இதை பூமியின் ராஜாக்கள் குடித்தனர். ஒரு மனிதனுக்கு முப்பது ஆண்டுகாலமாக வாழ்க்கைப்பட்டிருந்து அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்ற ஒரு ஸ்திரீயின் மேல் தண்ணீர் தெளித்து அவளைக் கன்னிகையாக மாற்றி வேறொருவனுடன் விவாகப்படுக்கையில் பங்கேற்க அவளை அனுப்ப முடியும் என்று சகோ. ஜாக்கர் அளிக்கும் விட்டமின் மாத்திரையை விசுவாசிக்கிறவர்கள் விசுவாசியுங்கள். பரிசுத்த தண்ணீர் அதை செய்ய முடியும் என்று விசுவாசிப்பவர்கள் எதையும் விசுவாசிக்க முடியும். அது உண்மை! பூமியின் ராஜாக்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றனர் - அப்படி செய்வதனால் அவர்கள் சமாதான உணர்ச்சியுடன் வாழ முடிகிறது என்பதற்காக. ஆனால் உன் இருதயத்தின் ஆழத்தில் அது அசுத்தம் என்பதை நீ அறிந்திருக்கிறாய். உன்னைச் சுத்திகரிக்க இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொள். இப்பொழுது கவனியுங்கள், இவளே ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் ஸ்தாபன சபை. வேதம் அதைக் குறித்து இங்கு உரைக்கிறது. 35மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. இப்பொழுது கவனியுங்கள். நாம் எல்லோரும் இதை ஒப்புக் கொள்கிறோம். ரோமரின் சொந்த புத்தகங்களே, கத்தோலிக்கரின் சொந்த புத்தகங்களே, இது ரோமன் சபையைக் குறிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். என்னிடம் எங்கள் மார்க்கத்தின் உண்மைகள் என்னும் புத்தகம் உள்ளது. அதை கத்தோலிக்க குருவானவர் மாத்திரமே வைத்துக் கொள்ள முடியும். ஒரு கத்தோலிக்க ஸ்திரீ என் ஊழியத்தில் மனம் மாறினாள். அவளுடைய மகன் ஒரு கத்தோலிக்க குருவானவர். அவள் எனக்கு இந்த புத்தகத்தை கொடுத்தாள். அவளுடைய மகன் நயமாகப் பேசி அவளை மீண்டும் கத்தோலிக்க சபைக்கு கொண்டு சென்று விட்டான். அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள அவள் என்னிடம் வந்தாள். நான் அவளிடம் அதைக் கொடுக்கவில்லை. அதை அத்தாட்சிக்காக வைத்துக் கொண்டேன். நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று அறிந்திருக்க விரும்பினேன். நான் ஏதாவதொன்றைக் கூறினால், அதைக் குறித்து நான் அறிந்திருக்க வேண்டும். அதற்கு தேவன் என்னைப் பொறுப்பாளியாக வைப்பார். 36அவள், ''இரகசியம், பாபிலோன்“ என்றழைக்கப்பட்டாள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். கவனியுங்கள், அவள் வேசிகளுக்கு தாய் வேசி என்றால் என்ன? அதே தான், நடத்தை கெட்டவள். இந்த ஸ்தாபனங்கள் எல்லாம் எங்கிருந்து தோன்றின? அதோ அவர்களுடைய தாய். இவையெல்லாம் அங்கிருந்து தான் தொடங்குகின்றன. ''அது அந்திக்கிறிஸ்து'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை தான். அது அந்திக்கிறிஸ்துவாக இருந்தால், நமது ஸ்தாபனங்களைக் குறித்தென்ன?இருவருமே வேசிகளாயிருந்து விபச்சாரம் செய்து, வேசித்தனம் செய்து, மனித அறிவின் விளைவாக தவறான காரியங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். வேதம் கூறுவது போல் ''மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதிக்கின்றனர். அது தான் இன்று சபை என்றழைக்கப்படுகிறது.'' அது தேவனுடைய ராஜ்யத்துக்கு விரோதமானது. 37பழைய ஏற்பாட்டில் நடந்தது போல. இஸ்ரவேலர் சபையாவதற்கு முன்பு தேவன் அதன் மேல் ராஜாவாயிருக்க விரும்பினார். அவர் ராஜாவாயிருந்தார். அவர்களுக்கு சாமுவேல் என்னும் தீர்க்கதரிசி இருந்தான். அவன் நல்லவன். அவன் இஸ்ரவேலரிடம், அவர்களுக்கு ராஜா வேண்டுமென்று பிரியப்பட்டால் அவர்களும் மற்றவர்களைப் போல இருக்க விரும்பினர், அவர்கள் பெலிஸ்தியரைப் போல் இருக்க விரும்பினார். பிராடெஸ்டெண்டுகளிடம் உள்ள தொல்லை அதுவே. நல்லதை அவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். அவர்கள்..... நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழுந்து, வல்லமை ஊற்றப்பட்ட போது அவர்கள் நடனமாடி, சத்தமிட்டு அந்நிய பாஷைகள் பேசினர். ஆனால் அவர்கள் அதை விட்டுவைக்காமல். ஸ்தாபனமாகச் செய்து விட்டனர். ஒரு கூட்டம் தோன்றி அவர்கள் தங்களை பொதுவான ஆலோசனை சங்கம் (General Council) என்று அழைத்துக் கொண்டனர். பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் சிறிது வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்ட வேறொரு கூட்டம் தோன்றி தங்களை, “புதிய விவகாரங்கள்'' (New Issues) என்று அழைத்துக் கொண்டனர். அதன் பிறகு P.A of J. C. அதாவது ''இயேசு கிறிஸ்துவின் பெந்தெகொஸ்தே அசெம்பிளி'' (Pentecostal Assemblies of Jesus Christ) என்னும் ஸ்தாபனம் எழும்பினது. இவர்களுக்கிடையே, அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வருவாரா அல்லது எப்படி வருவார் என்னும் விஷயத்தில் சிறிது உரசல் ஏற்பட்டு, பிளவு உண்டாகி, அவர்கள் பிரிந்து போய் P.A of W அதாவது ''உலக பெந்தெகொஸ்தே அசெம்பிளி'' (Pentecostal Assemblies of the World) என்னும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஒ, என்னே, என்னே அதன் பிறகு ''தேவசபை'' (Church of God) தோன்றினது. அங்கு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு பிளவு உண்டாகி, அவர்கள் மறுபடியும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்தாபனம் உண்டாக்கும் போதெல்லாம், தேவனுடைய சித்தத்தை விட்டு விலகுகின்றீர்கள்! அந்திக் கிறிஸ்துவின் ஆவி! 38தேவனுடைய சபை சுயாதீனமானது. அது எல்லைகளினால் கட்டப்பட்டதல்ல. ஏனெனில் ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரைக்கும் தேவனுடையதே. உலகில் வாழும் ஒவ்வொரு மானிடனும் அவருக்கே சொந்தமானவர்கள். அது கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டு, யாராயிருப்பினும், உத்தம இருதயமுள்ளவர்களை தேவன் தேடிக்கொண்டிருக்கிறார். நாம் விசுவாசத்தின் மூலம், அவரை விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறோம். அது தான் சபை. இப்பொழுது, பாருங்கள், சபை என்பது ஒரு ஸ்தாபனம் அல்ல. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைக் காணும் போது, அதன் மேல் ''அந்திக்கிறிஸ்து“ என்று எழுதப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இதோ அது வேதத்தில் உள்ளது. அது படிப்பதற்கு மிகவும் தெளிவாய் உள்ளது. ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஏராளமான என் விலையேறப் பெற்ற நண்பர்கள் இங்கு அமர்ந்துள்ளனர். நீங்கள் அந்திக்கிறிஸ்து என்று நான் கூறவில்லை. உங்களை நான் அவ்விதம் அழைக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னால்; பிசாசு அதை திரித்து, உங்களுக்கு அப்படிப்பட்ட ஒன்று தேவை என்பது போல் செய்துவிட்டான். இல்லையென்றால் நீங்கள் பிரசங்கம் செய்வதற்கும் கூட அனுமதிக்கப்படமாட்டீர்கள். நாடுகளைக் குறித்த விஷயத்திலும் அப்படித்தான். நாடு இல்லாமல் நீங்கள் ஒரு மனிதனாக இருக்க முடியாது. எங்காவது நீங்கள் ஒரு நாட்டைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும். நீங்கள் அமெரிக்கர்களாகவோ, ஜெர்மானியர்களாகவோ, அப்படி ஏதாவது ஒரு நாட்டைச் சேர்ந்திருக்க வேண்டும். பாருங்கள், எல்லாமே திரித்து விடப்பட்டுள்ளது. 39எனவே, உண்மையில், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் ஒரு சஞ்சாரி. உலகத்தின் பார்வையில் அவன் ஒரு துரோகி. ஆனால் தேவனுடைய பார்வையில் அவன் விலையேறப் பெற்றவன். நாம் எபிரேயர்: 11ம் அதிகாரத்துக்குச் சென்று அதில் சொல்லப்பட்ட விசுவாச வீரர்களைக் குறித்து பேச நேரமிருந்தால் நலமாயிருக்கும்... எப்படி ஆபிரகாம் தன் தேசத்தை விட்டு வெளியேறி தன்னை அந்நியனும் சஞ்சாரியும் என்று அழைத்துக் கொண்டு உலகமே அவனுடைய வீடு என்று கூறி, அலைந்து திரிகிறவனாய். தேவன் கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காக காத்திருந்தான். நாம் கிறிஸ்துவுக்குள் மரித்திருந்தால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராகி வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுடன் சுதந்திரவாளியாகிறோம். அது நம்மை என்ன செய்கிறது? அந்நியரும் சஞ்சாரிகளுமாய் செய்து விடுகிறது. 40இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளிவந்த போது, மோவாப் தேசம் இருந்தது. அது மிகவும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட தேசம். அவ்வாறே ஏசாவின் தேசமும் மிகவும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட தேசமாக இருந்தது. இதோ ஸ்தாபனம் எதையும் சேராத இஸ்ரவேல் வந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேலர் மோவாபியர் இருவருமே வார்த்தையை அடிப்படையில் பின்பற்றினர். ஞாபகம் கொள்ளுங்கள், பிலேயாம் இஸ்ரவேலர் செலுத்தின அதேவிதமான பலியைச் செலுத்தினான், ஏழு பலிபீடங்கள். தேவனுக்கு தேவையானவை. ஏழு சுத்தமான பலிகள், நீதியுள்ளவரின் வருகையை அறிவிக்கும் ஏழு ஆட்டுக் கடாக்கள். அடிப்படையில் இருவருமே சரியாயிருந்தனர். ஆனால் பிலேயாம் காணத்தவறினது, - எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திராத இஸ்ரவேலரின் மத்தியில் இயற்கைக்கு மேம்பட்டவை உள்ளதை அவர்களுக்குப் போக இடம் எதுவுமில்லை, அவர்கள் அலைந்து கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏதோ ஒரு இடத்துக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். இன்று ஜீவனுள்ள தேவனுடைய சபையும் அதே நிலையில் உள்ளது. உலகத்தைப் பொறுத்த வரையில், அது ஸ்தாபன மற்றது. அது ஸ்தாபனத்தின் கட்டுகளால் கட்டப்படாமல், இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலும் ஆவியினாலும் அன்பின் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளது. 41மெதோடிஸ்டும், பாப்டிஸ்டும் ஒருவரையொருவர் முதுகில் தட்டிக் கொடுத்து, ''என் விலையேறப் பெற்ற சகோதரனே என்று கூறட்டும் பார்க்கலாம். இருவரும் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போக முடியாது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். ஜனங்கள், ''நீ கிறிஸ்தவனா?“ என்று கேட்டால், ''நான் பாப்டிஸ்டு'' என்று பதில் வருகிறது. அதுவல்ல கேள்விக்கு பதில். ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பெந்தெகொஸ்தேகாரன்'' அதுவல்ல கேள்விக்குப் பதில். நீ கிறிஸ்தவனாயிருந்தால், மறுபடியும் பிறந்த சிருஷ்டியாயிருக்கிறாய். நீ காணக்கூடாத தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிறாய். உன் கண்கள் இவ்வுலகத்தின் காரியங்களை நோக்காமல் பரத்திலுள்ள காரியங்களை நோக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது நீ சபையின் அங்கத்தினனாயிருக்கும் போது, அதுதான் சபை. அது ஒரு ஸ்தாபனமல்ல. அது ஒது போதும் ஸ்தாபனமாயிருக்க முடியாது. நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! ஜீவனுள்ள தேவனுடைய சபை ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனக் குழுவாக இருக்க முடியாது. அது ஒரு ஸ்தாபனமாக இருக்க முடியாது. அது காணக்கூடாத சரீரமாக, பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும். சற்று கழிந்து, நமக்கு நேரமிருந்தால், இதை விவரமாகப் பார்ப்போம். 42இப்பொழுது சபை என்றால் என்ன அர்த்தம் என்பதை அறிந்து கொண்டீர்களா? சபை என்றால் ''வெளியே அழைக்கப்பட்ட,'' ஒரு கூட்டம் ஜனங்கள். அவர்கள் ராஜாவினால் மட்டும் மேசியாவின் ராஜ்யத்தில் ஆளுகை செய்யப்படுகின்றனர். ஓ, இது மிகவும் அற்புதம் அல்லவா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி) அது எனக்குப் பிரியம். அதை இன்று நான் படித்த போது... அங்கு ராஜ்யம், மேசியாவின் சாம்ராஜ்யம் என்று சொல்லப்பட்டிருந்தது. எழுத்தாளர் ''மேசியாவின் சாம்ராஜ்யம்'' என்று எழுதியிருந்தார். அவர் மேலும், ''ஜீவனுள்ள தேவனுடைய சபையை ஒருபோதும் ஸ்தாபனமாக்கி விட முடியாது. ஸ்தாபனம் என்பது ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு பதிலாக உருவாகி, அதன் இடத்தை அபகரித்துக் கொண்டது'' என்றும் கூறியிருந்தார். 43இந்த கள்ளப் போதகங்கள் அனைத்துமே அதைத்தான் செய்தன. அவை உண்மையான ஒன்றின் இடத்தை அபகரித்துக் கொண்டன. ஆகையால் தான் அந்த ஸ்திரீ அவளுடைய அசுத்தமும் அருவருப்பும் நிறைந்த பாத்திரத்தை தன் கையில் பிடித்திருந்தாள். இப்பொழுது பாருங்கள், நான் கூறவில்லை..... பெந்தெகொஸ்தேயினரும், கத்தோலிக்கர் அல்லது யாத்திரீக பரிசுத்தர் அல்லது நசரீன்கள், அல்லது பாப்டிஸ்டுகள் அல்லது மெதோடிஸ்டுகளைப் போலவே குற்றமுள்ளவர்களாயிருக்கின்றனர். ஆனால் இந்த ஸ்தாபன சபைகள் அனைத்திலும் தேவனுக்குப் பிள்ளைகள் உண்டு. அவர்கள் காணக்கூடாத ராஜ்யத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ஏதாவதொன்று நிகழ்ந்து தங்கள் இருதயங்கள் அதன் பக்கம் இழுக்கப்படுவதற்காக, அந்த ஒன்றிற்காக மாத்திரம் காத்திருக்கின்றனர். இவர்கள் கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலுமிருந்து வந்து, தங்களை வெளியே இழுத்துக் கொண்டு, தேவனை ஆராதித்து, கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கின்றனர் என்பதைக் குறித்து இன்றிரவு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி நாட்களில் அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று வேதம் உரைக்கிறது. அது முற்றிலும் உண்மை . ''அவர்கள் கடைசி நாட்களில் உண்மையான கர்த்தருடைய வசனத்தைத் தேடி கீழ்த்திசையிலிருந்து மேற்கு திசை மட்டும், வடக்கு திசை தொடங்கி தெற்கு திசை மட்டும் அலைந்து திரிவார்கள்: அது ஆகாரக் குறைவினால் உண்டான பஞ்சம் அல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்'' என்று வேதம் கூறுகிறது. அவர்கள் உங்களை, ''நீங்கள் வந்து இதை சேர்ந்து கொள்ளுங்கள், அதை சேர்ந்து கொள்ளுங்கள்'' என்கின்றனர். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் எதையும் சேர்வதில்லை, அதில் ஒன்றையும் நீங்கள் சேர முடியாது. அது சபைக்குள் பிறக்கும் ஒரு அனுபவமே , அதில் சேர்வதல்ல. இன்னும் ஒரு நிமிடத்தில், அதைக் குறித்து சிறிது அதிகமாக பேசுவேன். இங்கு இன்னும் சில வேத வசனங்களை எழுதிவைத்திருக்கிறேன். 44இப்பொழுது நாம் இரண்டாம் கருத்துக்கு செல்வோம். அவை எல்லாவற்றையுமே நாம் சிந்திக்க முயல்வோம். அதை நிறுவினது யார், அதாவது இந்தக் காணக்கூடாத சரீரத்தை யார் அதை துவங்கினது? இயேசுகிறிஸ்து. அதுதான்.... அவரே இந்த காணக்கூடாத சரீரத்துக்கு தலையாயிருக்கிறார். அவர் அதன் ராஜாவாக இருந்து, அவருடைய ராஜ்யத்தில் தம்முடைய சொந்த சித்தத்தை செய்கிறார். அது பேராயரின் கட்டுக்குள்ளோ , சபை சங்கத்தின் கட்டுக்குள்ளோ இல்லை. ஆனால் அது ராஜாவின் கட்டுக்குள் உள்ளது. மேசியாதாமே தமது சொந்த ராஜ்யத்தில் கிரியை செய்கிறார். அது எப்பொழுது துவங்கினது? பெந்தெகொஸ்தெவில். பெந்தெகொஸ்தே ஸ்தாபனமல்ல. பெந்தெகொஸ்தெ அனுபவம். அப்பொழுது தான் அது உங்களில் துவங்குகிறது. அது வருமென்று அவர் உரைத்தார். என்ன நடக்குமென்று அவர் கூறினார். அது வருமென்று அவர் உரைத்தார். 45நமக்குப் பிரியமானால், நாம் லூக்கா 24ம் அதிகாரம் 49ம் வசனத்துக்கு வேதத்தை திறந்து அங்கு காணலாம். நாம் சில வேத வசனங்களைப் படிக்கத் தொடங்கலாம். அப்பொழுது குறித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் எழுதி வைத்துக் கொள்வார்கள். லூக்கா 24:49. அவர் என்ன சொன்னாரென்று காண்போம். என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். வரப்போகிற ஒரு சபையைக் குறித்து, வரப்போகிற ஒரு ராஜ்யத்தைக் குறித்து, அவர் வாக்குத்தத்தம் செய்தார். இப்பொழுது அப்போஸ்தலர் 1ம் அதிகாரம் 8ம் வசனத்துக்கு திருப்புங்கள். அவர் மத்தேயு 16:18ல், இந்தக் கல்லின் மேல் அவர் தமது சபையைக் கட்டுவதாகவும், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்க்கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில நிமிடங்களில் அதற்கு நாம் வருவோம். இப்பொழுது மற்ற பொருளை காண்போம். அப்போஸ்தலர் 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். வரப்போகும் ராஜ்யத்துக்கு சாட்சிகள், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகள். அவருடைய வல்லமைக்கு சாட்சிகள், அவர் உயிரோடிருக்கிறார் என்பதற்கு சாட்சிகள். ''நீங்கள் என் சாட்சிகள்.'' இப்போது, அப்.1:8. 46பிறகு நாம் எபேசியர்: 1ம் அதிகாரம் 22ம் வசனத்தில் காண்கிறோம் - குறித்துக்கொள்ள விரும்புகிறவர்களே. குறித்துக் கொள்வதற்கு நிறைய வசனங்கள் உள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இதை ஆணித்தரமாக கூறுகிறேன். சரி , எபேசியர் 1ம் அதிகாரம் 22ம் வசனம். எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி (அதாவது கிறிஸ்துவின் பாதங்களுக்கு) எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். இந்த சபையை நிறுவினது யார்? இயேசு கிறிஸ்து. பேராயர் அல்ல, ஒரு கூட்டம் மக்கள் அல்ல, போப்பாண்டவர் அல்ல, மனிதனால் உண்டாக்கப்பட்ட அதிகாரங்கள் எதுவும் அல்ல. இயேசுகிறிஸ்து , அது வல்லமையோடு வரும் அவருடைய ராஜ்யம் என்று குறிப்பிட்டார். இங்கே நிற்கிறவர்களில் சிலர்... மத்தேயு 16ம் அதிகாரம், இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் வல்லமையோடு வருவதைக் காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவர் சிலுவையில் அறையப்பட்டார், பரிசுத்த ஆவி விழுந்தது. இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை.'' 47“இக்காலத்திலா ராஜ்யத்தை திரும்பக் கொடுப்பீர்? என்று யூதர்கள் அவரைக் கேட்டனர். அதற்கு அவர், ''பிதாவானவர் தம்முடைய ஆதினத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைவீர்கள்.“ (ஆங்கில வேதாகமத்தில் ”receive power“ - வல்லமையைப் பெறுவீர்கள் - தமிழாக்கியோன்) என்றார் - அப்போஸ்தலர்; 1. ''நீங்கள் பேராயரான பின்பு, நீங்கள் பிரசங்கியான பின்பு, நீங்கள் போப்பாண்டவரான பின்பு, நீங்கள் குருவானவரான பின்பு வல்லமையைப் பெறுவீர்களா?'' பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். அப்படிப்பட்ட ஒரு சாட்சியைத் தான் தேவன் எதிர் நோக்கியிருக்கிறார், பரிசுத்த ஆவி வந்த பிறகு ஒரு சாட்சி. நான் பேராயர் என்னும் சாட்சியல்ல, நான் போதகர் என்னும் சாட்சியல்ல. ஆனால் யாருக்கு சாட்சி? உயிர்த்தெழுந்த ராஜாவுக்கு அதுதான் ஜீவனுள்ள தேவனின் உண்மையான சபை. சரி. 48மேலும் கொலோசெயர்; 1:17,18 வசனங்கள். இதை நாம் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இவ்வசனங்களைப் படிப்போம். கொலோசெயர்; 1:17 மற்றும் 18வது வசனம்: அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர், எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். இந்த சபைக்குத் தலையானவர் யார்? இயேசுகிறிஸ்து. அது என்ன ராஜ்யம்? மேசியாவின் ராஜ்யம், சபை, ஸ்தாபனமல்ல, சபை, கிறிஸ்து தலையாயிருக்கிற காணக்கூடாத சபை, ஓ, அது எனக்குப் பிரியம். ஆவியில் நடந்து, ராஜாவுக்கு கீழ்ப்படிதல்; உலகத்துக்கு புத்தயீனமாய் தோன்றும், ஆனால் தேவனுடைய பார்வையில் அது விலையேறப் பெற்றது. ஆவியில் நடத்தல்; தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, நகைக்கப்பட்டு, கேலி செய்யப்படுதல். ''கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.'' ''உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் துன்பப்படுத்தி, வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவருடைய சீஷர்களை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?ஆனால் நீங்கள் ஆவியில் நடந்து, உங்கள் முதுகை உலகத்தின் காரியங்களுக்குத் திருப்பி, எந்த விலங்குகளினாலும் கட்டப்படாமல் இருக்கிறீர்கள். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்'' ஆமென். அது தான் ஜீவனுள்ள தேவனுடைய சபை . அவர்தான் அதை நிறுவினார். 49அப்போஸ்தலர்; 1:8ல் நாம் சாட்சிகளைக் காண்கிறோம். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.'' சபை என்பது என்ன? காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம். யார் அதை நிறுவினது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே. அது ரோமாபுரியில் நிறுவப்படவில்லை. அது இங்கிலாந்தில் ஜான் வெஸ்லியினால் நிறுவப்படவில்லை, அது கால்வினால் நிறுவப்படவில்லை, அது அமெரிக்காவில் (பாப்டிஸ்டு) ஜான் ஸ்மித்தினால் நிறுவப்படவில்லை. அது கலிபோர்னியாவில் பெந்தெகொஸ்தேயினரால் நிறுவப்படவில்லை. அது மேசியாவின் ராஜ்யத்துக்கு ராஜாவாயிருக்கும் இயேசு கிறிஸ்துவினால் நிறுவப்பட்டது. அவர் தான் அதை நிறுவினார். அவரே ராஜா. அவர் ராஜாவாயிருக்க விரும்புகிறார். அவர் நம்மை ஆளுகை செய்ய விரும்புகிறார். அவர் ஆண்டவராயிருக்க விரும்புகிறார். 50ஜனங்கள் அவரை உள்ளே அனுமதித்து, அவர் எனக்கு இரட்சகராக இருக்க சம்மதிப்பேன்'' என்கின்றனர். ஆனால் அவர் ஆண்டவராயிருக்க அவர்கள் சம்மதிப்பதில்லை. ஆண்டவர் என்றால் ''உரிமையாளர்''. ''ஆளுபவர்'' என்று பொருள். ''ஆண்டவரே, என் இருதயத்தில் வாரும், என்னை நரகத்திலிருந்து தப்புவியும். ஆனால் நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூற வேண்டாம். அது தான் ஜனங்களின் மனப்பான்மை. வேதம், ''போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது'' என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. வாந்தி என்றால் என்ன தெரியுமா? ''நாய் தான் கக்கினதைக் தின்னவும்.'' இந்த ஸ்தாபனங்கள் முதலாவதாக சரியானவிதத்தில் கிரியை செய்யாததால், தேவன் அவர்களை வாந்தி பண்ணிப் போட்டார். நீங்கள் அவர்களிடம் செல்வீர்களானால், அவர்கள் உங்களை வாந்தி எடுக்கப் பண்ணுவார்கள். ''நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். நீ வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திப் பண்ணிப் போடுவேன். நீங்கள் தேவனுக்கு வயிற்றுக் குமட்டல் உண்டாக்குகிறீர்கள். அவர் வாந்திப் பண்ணிப் போடுகிறார். 51விழுந்து போன ஒரு ஸ்தாபனம், எப்பொழுதாவது மீண்டும் எழுந்ததை எனக்குக் காண்பியுங்கள். அப்படி எழுந்ததென்று வரலாற்றிலிருந்து எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். ஒரு மனிதன் ஒரு ஊழியத்துடன் எழும்பும் போது தேவன் அந்த மனிதனை ஆசீர்வதிக்கிறார். முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அவன் அதை மனிதர்களிடையே பரப்பி அவர்கள் அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளும் போது, அது அதை அங்கேயே கொன்றுவிடுகிறது. நீங்கள் வரலாற்றுகளைப் படித்து அவை மீண்டும் எழுந்ததா என்று பாருங்கள். ஒன்று கூட மீண்டும் எழும்பவில்லை. ஏனெனில் அது மக்களிடையே அந்திக்கிறிஸ்துவின் ஆவி . 52மோசேயையும் மற்றவர்களையும் போல், அவர்கள் தங்களுக்கென ஏதாவதொன்றைச் செய்ய விரும்புகின்றனர். ''ஆண்டவரே, இந்த ஆண்டு எங்களுக்கு அதிகமான அங்கத்தினர்கள் உள்ளனர் உங்களுக்கு அநேக அங்கத்தினர்கள் இருப்பதால், அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது?'' நாம் ஸ்தாபன சபையின் அங்கத்தினர்களை எதிர்நோக்கியிருக்கவில்லை. நாம் எதிர்நோக்கியிருப்பது, ''மனுஷருடைய சித்தத்தின் படி பிறவாமல் தேவனுடைய சித்ததத்தின்படி,'' தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிறக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினரையே - மனிதனுடைய ஆவியினால் அல்லது மனிதனின் அறிவினால் பிறந்தவரை அல்ல. பவுல், ''நான் உங்களிடத்தில் மனுஷஞானத்தோடு வரவில்லை. உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, மனுஷ ஞானத்திற்குரிய நயவசனத்தில் அல்ல, தேவனுடைய பெலத்திலும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையிலும் நிற்கும்படி, நான் உங்களிடத்தில் தேவனுடைய ஆவியோடு வந்திருக்கிறேன்“ என்றான். அதற்காகத்தான் அவன் வந்தான். நாமும் அதையே செய்ய தேவன் நமக்குதவி செய்வாராக. 53நாம் ஒவ்வொன்றிலும் அதிக நேரம் செலவழிக்க விரும்பவில்லை. இப்பொழுது நான், இந்த சபையின் செய்தி என்ன? என்பதைக் கண்டு கொள்ள விரும்புகிறேன். இந்த சபை போதிக்க வேண்டியது என்ன? அதன் செய்தி என்ன? இந்த சபை (காணக்கூடாத சரீரம்) போதிக்க வேண்டிய முதலாம் செய்தி மனந்திரும்புதல் என்பது என் கருத்து. இப்பொழுது நாம் சிறிது நேரம் வேதாகமத்தை லூக்கா: 24ம் அதிகாரத்துக்குத் திருப்புவோம். லூக்கா: 24ம் அதிகாரம். சபை செய்ய வேண்டிய முதலாவது காரியம் மனந்திரும்புதல், அது மனந்திரும்புதலைப் போதிக்கும். இயேசு இவ்வுலகை விட்டுச் செல்ல ஆயத்தமாயிருக்கிறார். இது கடைசி அதிகாரம், அவர் இவ்வுலகை விட்டு செல்ல ஆயத்தமாயிருக்கும் போது, லூக்கா: 24:46. நாம் 46ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந் தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்... ஓ, இது உங்களில் பதிய வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் ஒரு நிமிடத்தில் “பாவ மன்னிப்பு என்பதற்கு நான் வரப்போகிறேன்.... தேவனிடம் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். 54(ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). அவர் பாடுபட்டார்“ என்று வேதம் உரைக்கிறது. அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். வேதம் முழுவதுமே அவரை மையமாகக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, என்ன போதிக்கப்பட வேண்டும் என்பதை - அவர் அறிந்திருப்பார். மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஸ்தாபனம் ரோமாபுரியில் துவங்கினது. ஸ்தாபன சபை ரோமாபுரியில் துவங்கி, மார்டின் லூத்தரின் காலத்தில் ஜெர்மனிக்கு வந்து, வெஸ்லியின் காலத்தில் இங்கிலாந்துக்கு வந்து, பெந்தெகொஸ்தெயினரின் காலத்தில் கலிபோர்னியாவை அடைந்தது. ஆனால் சபை எருசலேமில் தொடங்கினது தேவனிடம் மனந்திரும்புதலும், பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானமும் எருசலேமில் தொடங்க வேண்டியது. அவர் நிச்சயம் தொடங்க வேண்டும்'' என்று சொன்னார். அவர் அங்கு அடையும் என்று கூறவில்லை. அங்கு நிச்சயமாக தொடங்க வேண்டும்.அது நிச்சயமாக உலகமெங்கும் செல்ல வேண்டும். அது நிச்சயமாக பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆனால் வெகு சிலரே அதை செய்கின்றனர். ஆனால் அப்படித்தான் அவர் கூறினார், அவருடைய செய்தி. அதுவே சபையின் செய்தி. அதை போதிக்கும் சபையை எனக்குக் காண்பியுங்கள். அது எங்குள்ளது என்று என்னிடம் கூறுங்கள். அதை நீங்கள் காண முடியாது. 55இப்பொழுது, இயேசுவே ராஜா (இரண்டாம் செய்தி), இயேசுவே ராஜா. அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். மத்: 28:20. இயேசுவே ராஜா. அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். அதைத் தான் சபை போதிக்க வேண்டும். மத்: 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) எபி. 13:8. ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. அது தான் சபையின் செய்தி: அவருடைய கிரியையை செய்து, அவருடைய உயிர்த்தெழுதலை நிரூபித்து, சாட்சிகளை அறிவிப்பது. இப்பொழுது அப்: 5:32. அவர்கள் அதை பெற்றிருந்தார்களா இல்லையாவென்று அங்கு காணலாம். அப்போஸ்தலர் 5ம் அதிகாரம், 32ம் வசனம்: இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்: தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். (அவர் சாட்சியாக அறிவிக்கப்பட வேண்டும்). 56யோவான் 14:12, சபை என்ன செய்ய வேண்டும் என்று அவர் போதிக்கிறார். யோவான்: 14ம் அதிகாரம்... 12ம் வசனம் என்ன சொல்லுகிறதென்று நாம் காணலாம். யோவான்: 14:12ஐப் படித்து அதை அதிகாரப் பூர்வமாக்கலாம். சரி. யோவான் 14,12ம் வசனம்: மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். அது தான் சபையின் செய்தி. ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக, சபையின் ராஜாவாக சபையில் வாழ்ந்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டு, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக, அவர் செய்த அதே கிரியைகளை செய்து வருதல். அதுவே சபையின் செய்தி. சபை இதை போதிக்கவில்லை என்றால், ஏதோ ஒரு தவறான வேத சாஸ்திரத்தைப் போதிக்கிறது. இதைத்தான் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளையிட்டார். 57வேறு எதுவாக அது இருக்க முடியும்? நாம் எப்படி அறிந்து கொள்வது இந்த ஜனங்கள்.... ''நல்லது, நான் ஒரு விசுவாசி“ என்று அவர்கள் கூறிக் கொள்கின்றனர். சபைக்கு, விசுவாசிகளுக்கு, அவர் அளித்த கடைசி கட்டளை என்னவென்று நாம் காணலாம். மாற்கு: 16. மாற்கு 16வது அதிகாரத்தை எடுத்து சபைக்கு அவர் அளித்த கடைசி செய்தி என்ன என்று பார்ப்போம். அவருடைய கட்டளையை நாம் பின்பற்றுகிறோமா என்று பார்ப்போம். மாற்கு; 16, நாம் 14ம் வசனத்தில் தொடங்குவோம். அதன் பின்பு, பதினொருவரும் போஜன பந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி... (இது அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு) இதோ சபைக்கு அளிக்கப்பட்ட கட்டளை, இப்பொழுது கவனியுங்கள், கடைசி கட்டளை. நாம் விசுவாசிகள்தானா, நாம் இந்த சபையில் இருக்கிறோமா இல்லையாவென்று சரி பார்ப்போம். அதன் பின்பு, பதினொருவரும் போஜன பந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். 58அவர் உயிர்த்தெழுந்துள்ளதை சிலர் கண்டனர். இதை மற்றவர்களிடம் அவர்கள் கூறினபோது, அவர்கள் நம்பவில்லை. இன்றுள்ள நிலையும் அதுவே அவர் ஜீவிக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். நமக்குள் இருக்கும் அவருடைய ஆவி நமக்கு சாட்சியாய் உள்ளது. அவருடைய வல்லமை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்ட கூட்டத்தின் மேல் அசைவாடி அவர் இவ்வுலகில் இருந்த போது செய்ததைப் போலவே இப்பொழுதும் அவர்களுடைய சிந்தனைகளைப் பகுத்தறிவதை நாம் காண்கிறோம். வேதம், “தேவனுடைய வார்த்தை'' என்று அழைக்கிறது. அவர் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று கிறிஸ்து உரைத்திருக்கிறார். அவர் அதைச் செய்கிறதை நாம் காண்கிறோம் எத்தனை பேர் அவர் செய்வதைக் கண்டிருக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி) நிச்சயமாக, அவர் செய்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர் இங்கு ஜீவிக்கிறார். அவர் நமது இருதயத்தில் இருக்கிறார். 59அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை, அன்றும் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை, இப்பொழுதும் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. அவர் மரித்தார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர், அத்துடன் அது முடிவு பெறுகிறது. ஏதோ ஒருவன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பி ஒரு சபையை நிறுவி, சபைப் பிரமாணங்களை (catechism) எழுதி வைத்தான் என்னும் ஏதோ ஒருவகையான சரித்திரம் நமக்குண்டு, அதைத் தான் நாம் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். அது அஞ்ஞானம்! அது உண்மை. அதில் உண்மை எதுவுமில்லை. அந்த மனிதன் செய்தது, உண்மையல்ல என்று நான் கூறவில்லை. அவன் உத்தமமாக அதை செய்திருப்பான். ஆனால் தேவன் அந்த விதமாக தமது சபையைக் கட்டுப்படுத்துவதில்லை. அவர் அவ்விதம் விரும்பவில்லை. 60இஸ்ரவேலர் தங்களுக்கு ராஜா வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போது, சாமுவேல் அவர்களை அழைத்து, ''உங்களை ஒன்றுக்கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு எப்பொழுதாவது நான் தவறிழைத்ததுண்டா? உங்களிடம் எப்பொழுதாவது நான் பணம் கேட்டதுண்டா? கர்த்தருடைய நாமத்தில் நான் உரைத்தது நிறைவேறாமல் இருந்ததுண்டா? நீங்கள் ராஜாவைப்பெற தேவனுக்கு விருப்பமில்லை, அவரே உங்கள் ராஜாவாக இருக்க விரும்புகிறார்,'' என்றான். அவர்களோ, ''ஓ சாமுவேலே, நீர் சொல்வது உண்மை தான். நீர் சிறந்த தீர்க்கதரிசி. நீர் உண்மையையல்லாமல் வேறொன்றையும் எங்களிடம் கூறினதில்லை. எங்கள் பணத்தை நீர் கேட்கவில்லை. இவையெல்லாம் உண்மை தான். ஆனால் நாங்கள் மற்றவர்களைப் போல் இருக்க விரும்புகிறோம். எங்களுக்கு எப்படியும் ஒரு ராஜா வேண்டும்'' என்றனர். சாமுவேல், ''அது உங்களுக்கு மனோ வேதனையும் தொல்லைகளையும் விளைவிக்கும். அவன் உங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் கொண்டு போய், அவன் புரியும் செயல்களில் அவர்களை மாசுப்படுத்துவான். அவன் செய்வான்'' என்றான். அவன் செய்தான்! இருப்பினும், அவர்கள் ஒரு ராஜாவை விரும்பினர். 61இன்றைக்கும் அவர்கள் அவ்விதமே செய்கின்றனர். “ஓ, எங்களுடன் ஏதாவது ஒரு பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஜனங்கள் எங்களைக் கேட்கும் போது, ''நாங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு என்று சொல்ல வேண்டும்.'' ''நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுங்கள்” அது உண்மை. ''கிறிஸ்துவைப் போன்றவர்கள்'' அவர் மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு, அவர்கள் அதை நம்பவில்லை. பின்பு அவர் அவர்களை நோக்கி: நீங்கள்.... உலகின் எவ்வளவு பாகத்திற்கு (சபையோர், ''உலகமெங்கும் என்கின்றனர் - ஆசி.) ஓ, நான் எருசலேமில் மாத்திரம் என்றல்லவா நினைத்தேன்? யாரோ ஒருவர், இந்த அடையாளங்கள் எருசலேமில் மாத்திரம் காணப்பட்டன என்றார்.... உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். 62சுவிசேஷம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி) அது ''வசனத்தோடு மாத்திரமல்ல.'' (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டிக் கொடுக்கின்றார் - ஆசி ) பவுல், எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடு மாத்திரமல்ல, வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் வந்தது.'' என்கிறான் (1.தெச: 1:5). சுவிசேஷம் என்பது வசனம் என்ன சொல்லுகிறதோ அதை செயல்படுத்தும் தேவனுடைய வல்லமையாகும். உலகமெங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் சுவிசேஷத்தை வெள்ளையர், அல்லது பழுப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், கருப்பு நிறத்தவருக்கு மட்டும் பிரசங்கியுங்கள் என்றா உள்ளது? ''சர்வ சிருஷ்டிக்கும். ஆமென். சர்வ சிருஷ்டிக்கும் அதுதான் அர்த்தம் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) ஒரு நாள் தேவன் ஒரு முரட்டுக் காளையை பிரமிக்கச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். அவர் தேனீக்கள் கொட்டாதபடி தடை செய்வதை நான் கண்டிருக்கிறேன். இரவு முழுவதும் செத்துக்கிடந்த ஒரு, ''ஆப்போஸம்'' மிருகத்தை அவர் உயிரோடெழுப்புவதை நான் கண்டிருக்கிறேன் (''ஆப்போஸம்'') என்பது கங்காரு வகையைச் சேர்ந்த ஒரு அமெரிக்க மிருகம்- தமிழாக்கியோன்). சர்வ சிருஷ்டிக்கும்! நீங்கள் கேட்கும் எதன் பேரிலும் சுவிசேஷம் பலனையளிக்கும். நீங்கள், சகோ. பிரன்ஹாமே, அது தவறு எனலாம். அது தவறல்ல. 63இயேசு அத்தி மரத்தைப் பார்த்து சபித்து, இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது, என்றார். சுவிசேஷமானது அந்த மரத்துக்குப் பிரசங்கிக்கப்பட்டது. ''ஆமென்'' இப்பொழுது நான் பக்தி பரவசப்படுகிறேன். சர்வ சிருஷ்டிக்கும்! ''ஆமென்'' யாருக்கு பிரசங்கிப்பது? சர்வ சிருஷ்டிக்கும்! ஓ, இவைகளைச் சிந்திக்க நமக்கு நேரம் மாத்திரம் இருந்தால்! விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்... (''ஓ, நான் ஞானஸ்நானம் பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன். அருமையானது, நல்லது, சரி'')... விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ''ஓ, நான் விசுவாசியாயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நிமிடம் பொறுங்கள். மற்றும் அது ஒரு இணைச் சொல். இரண்டு வாக்கியங்களை அது ஒன்றாக இணைக்கிறது. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் இந்த அடையாளங்கள்... ஓ, உங்களுக்கு அடையாளங்களில் விசுவாசம் இல்லை என்று நினைத்தேன். இது இயேசுவின் சொந்த சொற்கள். அவருடன் வாக்குவாதம் செய்யுங்கள்... விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் (ஒருவேளை நடக்கும், சில சமயங்களில் நடக்கும் என்றல்ல. அவர்களால் நிச்சயம் நடக்கும்). நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா இல்லையா, உங்கள் ஸ்தாபனம் விசுவாசிக்கிறதா இல்லையாவென்று நாங்கள் காணப்போகிறோம். அவர்கள் விசுவாசிப்பதாக ஒருவேளை கூறலாம். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் நிச்சயம் தொடரும் என்று இயேசு கூறினார். இவர்களோ இந்த அடையாளங்களை மறுதலிக்கின்றனர். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: (எவ்வளவு?) என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். 64தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிராத சபைகளே இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, உங்களுக்கு விளங்குகிறதா? நான் எப்பொழுதும் உங்களிடம் பேசுவதில்லை. இந்த ஒலிநாடாவை வேறுயாராவது கேட்பார்கள், தேவனையும் அவருடைய கட்டளையையும் விசுவாசிப்பதாகவும், சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல உங்கள் சபைக்கு கட்டளையளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிமை கோருபவர்களே, முதலாவது காரியம் தெய்வீக சுகமளித்தல். இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பின போது, அவர்களிடம் சொன்ன முதலாவது காரியம் என்ன? மத். 10:1. ''வியாதியஸ்தரை சுகப்படுத்தி, பிசாசுகளைத் துரத்துங்கள்.'' அல்பாவும் ஓமெகாவும், இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர், விடிவெள்ளி நட்சத்திரம், தாவீதின் வேரும் சந்ததியுமானவர். அல்லேலூயா அது அவர். ஆம், ஐயா. விசுவாசிக்கிறவர்ளை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். ''எருசலேமில் மட்டுமா?'' உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும். அது வேதம்தானா? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி) வேதம் அப்படித்தான் கூறுகிறது. அது தான் சபையின் செய்தி. உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும், சுவிசேஷம் விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் இந்த அடையாளங்கள் தொடரும்.... 65என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள். பரிதாபத்திற்குரிய நசரீன்களே, அவர்களை பாஷை மக்கள் என்று அழைக்கிறீர்களே, அவர்களுடன் நீங்கள் சபையில் உட்காரவும் கூட மாட்டீர்கள். அது பயங்கரமான செயல் அல்லவா? நீங்கள் பரலோகத்துக்குச் செல்லும் போது என்ன செய்யப் போகிறீர்கள்? இயேசு அந்நியபாஷை பேசிவிட்டு, ஜீவனை விட்டார். அவர் வேறொரு பாஷையில் பேசினார் என்று எழுதப்பட்டுள்ளது. அவர் நிச்சயம் பேசினார். ''அவர் எபிரெய பாஷையில் பேசினார்.'' இல்லை, அது எபிரெய எழுத்தல்ல. அவர் பரலோக பாஷையில் பேசினார். 66ஆபேல் ஆட்டுக்குட்டியை கன்மலையின் மேல் பலி செலுத்தின போது, அது செத்துக் கொண்டிருந்தது. அவன் அதன் கழுத்தை வெட்டிக் கொண்டிருந்தான். ஏதேன் தோட்டத்தில் அது கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந்தது. அந்த ஆட்டுக்குட்டி சாகுந்தருவாயில் வேறோரு பாஷையில் சத்தம்மிட்டது. அது முன்னடையாளமாகத் திகழ்ந்தது. அதன் ரோமம் அதன் சொந்த இரத்தத்திலே ஊறிக் கிடந்தது. கல்வாரியில் தேவனுடைய குமாரன் தொங்கினவராய், நமது பாவங்களின் நிமித்தம் துண்டு துண்டாக வெட்டப்பட்டவராய், ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?'' என்று வேறொரு பாஷையில் கதறினதற்கு அது முன்னடையாளமாயிருந்தது. 67''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், என்பது சபையின் செய்தியாய் உள்ளது. அவர் அவ்விதம் தான் கூறினார். அது சபையின் செய்தி. அவர்கள் பிசாசுகளைத் துரத்த வேண்டுமென்றும், நவமான பாஷைகளைப் பேச வேண்டுமென்றும் அவர் சபைக்கு கட்டளை கொடுத்தார். சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். அதுதான் சபைக்கு அளிக்கப்பட்ட கட்டளை. அதுவே உண்மையான விசுவாசிக்கும் சபை. இது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், லூத்தரன், யாத்திரீக பரிசுத்தர் சபைகளில் போதிக்கப்படுவதில்லை. இல்லை . ஐயா, அவர்கள் அதை மறுதலிக்கின்றனர். மகிமை! ஏன்? அவர்கள் ஸ்தாபனமாயுள்ளனர், அவர்களால் அதை செய்ய முடியாது. அவைகளில்லுள்ள அநேக அங்கத்தினர் அதை விசுவாசிக்கின்றனர். ஆனால் இதைக் குறித்து அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவர்கள் சபை பிரதிஷ்டம் செய்யப்படுவார்கள். அதுதான் அந்திக்கிறிஸ்துவின் ஆவி, அவர்களை ஸ்தாபனம் உண்டாக்கச் செய்தது. ஜீவனுள்ள தேவனுடைய சபை சுயாதீனமாகப் பிறந்தது. அதற்கு எந்த ஸ்தாபனமும் தேவையில்லை. அவர்கள் மேசியாவின் ராஜ்யத்தின் ராஜாவைப் பின்பற்றுகின்றனர். ஜனங்கள் கூறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சுயாதீனமாகப் பிறந்தவர்கள். அவர்கள் குமாரனால் விடுதலையாக்கப்பட்டவர்கள். குமாரன் அவர்களை விடுதலையாக்கினார். இந்த அடையாளங்கள் அவர்களைத் தொடரும். 68சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்! யார் அதை பிரசங்கிப்பார்கள்? தேவன், ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண, இந்த கல்லுகளை எழுப்ப வல்லவராயிருக்கிறார் தேவன் படிப்பறியாதவர்களை எடுத்து உபயோகிக்க வல்லவராயிருக்கிறார். தேவன் தாம் விரும்பின எதையும் செய்ய முடியும், அவர் தேவனாயிருக்கிறார். அவர் அவ்விதமாகவே அதை செய்கிறார். அவர் இவ்வுலகிற்கு வந்த போது காய்பாவை அழைக்கவில்லை. அவர் ஒரு ஆசாரியனையும் அழைக்கவில்லை. அவர் ஒரு வேத பண்டிதனையும் அழைக்கவில்லை. அவர் மீன் பிடிப்பவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், படிப்பறியாதவர்கள், பேதமையுள்ளவர்கள் போன்றவர்களைத் தெரிந்து கொண்டார். பேதுருவும் யோவானும் படிப்பறியாதவர்களும் பேதமையுள்ளவர்களுமாயிருந்தனர் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அவர் அவர்களுக்கு வல்லமையளித்து, தேவனுடைய ராஜ்யத்தை அவர்கள் மூலம் கிரியை செய்து நிறுவி, ஞானிகள் மகத்துவமானவர்களின் சிந்தைகளையும் கண்களையும் கலங்கடிக்கச் செய்தார். அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் அறிந்து கொண்டார்கள் என்று வேதம் உரைக்கிறது. ஏன் - அவருடைய ஆவி அவர்கள் மேல் தங்கியிருந்தது. அவர் நடந்து கொண்டது போலவே இவர்களும் நடந்து கொண்டனர். அவர் செய்த கிரியைகளை இவர்களும் செய்தனர். மேசியாவின் ராஜ்யத்தில் இப்படித்தான் நடக்கும் என்று அவர் உரைத்தார். ஓ, இவைகளுக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். நிச்சயமாக, அடையாளங்கள் அவர்களைத் தொடரும். 69சபை போதிக்கும் வேறொன்று தெய்வீக சுகமளித்தல். அது சபையின் செய்தியாயிருக்கும். நான் சற்று முன்பு மத்:10:1ஐ எடுத்துரைத்தேன். அவர் தமது சபையை வெளியே அனுப்பின போது - இப்பொழுது நாம் மத்: 10:1க்கு சென்று ஒரு நிமிடம் அதைப் பார்ப்போம். இயேசு தமது சபையை நியமித்து வெளியே அனுப்பின போது என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (அவருடைய சபைக்கு முதலாம் கட்டளை). 70கடைசி கட்டளை, நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன்.... அது எவ்விதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறேன், அதாவது அதை எவ்விதம் அர்த்தப்படுத்த வேண்டும் என்று: ''நீங்கள் உலகமெங்கும் ஒவ்வொரு தேசத்துக்கும் சென்று, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் கிரியை செய்யுங்கள். அதில் விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், அதை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்: வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்; பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்.'' அவர்களைத் தொடரும் அடையாளங்கள் இவைகளே. கடைசி வசனம், ''அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். கர்த்தர் அவர்களுடனே கூட கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்'' என்றுரைக்கிறது. முதலாம் சபை அவ்விதம் தான் இருந்தது. 71கவனியுங்கள், இயேசு, ''நானே திராட்சைச்செடி. நீங்கள் கொடிகள்'' என்றார். ஒரு திராட்சைச் செடியில் ஒரு கொடி தோன்றி அந்தக் கொடியில் திராட்சைப் பழங்கள் உண்டாகி, அதில் வேறொரு கொடி தோன்றும் போது, முதலாம் கொடியைப் போலவே இக்கொடியிலும் பழங்கள் உண்டாகும். ஓ, நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, இந்த ஸ்தாபன சபைகளைப் பாருங்கள்'' எனலாம். அது திராட்சைச் செடியில் ஒட்டு போடப்பட்டது. நீங்கள் எலுமிச்சை வகை செடியை ஒட்டு போடலாம். நீங்கள் ஆரஞ்சு மரத்தில் எலுமிச்சை கிளையை ஒட்டுப் போட்டால், அது வளரும். அதைத் தான் மனிதராகிய நீங்கள் ஒட்டுப் போட்டிருக்கிறீர்கள். இந்த ஸ்தாபனங்கள் அனைத்தும் மனிதர் ஒட்டுப் போட்டவையே. அது எப்பொழுதுமே எலுமிச்சையாக இருந்து வந்துள்ளது. அது சபையின் பெயரில் ஒட்டுப் போடப்பட்டுள்ளதால் அது வளரும். ஆனால், உங்களுக்கு இதை கூற விரும்புகிறேன், அந்த மரத்தில் எப்பொழுதாவது வேறொரு கிளை முளைக்குமானால், அது ஆரஞ்சு பழங்களைத் தரும். தேவனுடைய வல்லமை எப்பொழுதாவது வேறொரு சபையைத் தோன்றச் செய்யுமானால், அது மற்றுமொரு பெந்தெகொஸ்தேயாக இருக்கும். அது மற்றுமொரு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தை எழுதும். ஏனெனில் அது தேவனுடைய சபை. 72இயேசு, ''நானே திராட்சைச்செடி , நீங்கள் கொடிகள். நீங்கள் தானாகவே கனி கொடுக்க முடியாது. ஆனால் என்னையே நான் கொடியுடன் இணைத்துக் கொண்டிருக்கிறேன், என்றார். அது எப்படிப்பட்ட கனிகளைக்கொடுத்தது? ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்.'' இரண்டாம் சபை, காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம், எழும்பினால் அதில் இதே அடையாளங்கள் காணப்படும். ''இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் வாசம் பண்ணி, உங்களுக்குள் - ஒவ்வொரு கிளைக்குள்ளும்- இருப்பேன்.'' இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதுதான் ஜீவனுள்ள தேவனுடைய சபை. அதுதான் அவர். அவ்விதமான சாட்சிகளை அவர் பெற்றிருக்கிறார். 73சபை ஞானஸ்நானத்தையும் போதிக்க வேண்டும். அது ஞானஸ்நானம் பெற வேண்டும். அது கட்டளை பெற்றுள்ளது. இயேசு மாற்கு: 16ல் உரைத்ததை இங்கு குறிப்பிடுவோம்: ''விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன். ''முதலில் விசுவாசித்து, அதன் பிறகு பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்'' என்பது சபையின் போதனையாயிருக்க வேண்டும். இயேசு லூக்கா: 24:49ல் உரைத்தார்.... நாம் அந்த வசனத்தின் அருகாமையில் இருக்கிறோம். எனவே ஒரு வினாடி அதற்குத் திருப்புவோம். இங்கு 49ம் வசனம். நாம் 46ம், 47ம் வசனங்களைப் படித்தோம். 49ம் வசனத்தைப் பாருங்கள்: என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள். (அதாவது காத்திருங்கள் என்றார்.) கிறிஸ்து தம்மோடு மூன்றரை வருடங்களாய் நடந்த ஒரு கூட்டம் மனிதர்களை, பரிசுத்த ஆவிக்காக காத்திராமல், சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுமதிக்காதிருந்தாரானால், இன்று சபையும் அதையே செய்ய வேண்டும். பரிசுத்த ஆவிக்காக காத்திருங்ககள்! 74நான் அண்மையில் ஒரு கத்தோலிக்க ஸ்திரீயுடன் ஆரிகான் என்னுமிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவள், ''நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்த இடத்தில் உரக்க சத்தமிட்டு, அழுது, அந்தவிதமாக நடந்து கொண்ட அந்தக் கூட்டம் மடையர் பரலோகத்தில் இருந்து பரலோகத்தில் அரசாளுவார்கள் என்றா கூறுகிறீர்கள்?'' என்று கேட்டாள். நான், “ஆம், அம்மணி'' என்று விடையளித்தேன். அவள் அப்படிப்பட்டவைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாள். நான், அது ஏனென்றால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதில்லை'' என்றேன். அவள், மரியாள் எங்களுக்காக பரிந்து பேசுகிறாள் என்றாள். நான், ''அது முற்றிலுமாக அஞ்ஞானப் பழக்கம் என்றேன்.'' மரியாள் ஒரு பெண் தெய்வம் அல்ல. அவள் ஒரு ஸ்திரீ. ''தேவனுடைய தாய்.'' தேவனுக்கு எப்படி ஒரு தாய் இருக்க முடியும்? ''தேவனுடைய தாயாகிய மரியாளே, வாழ்க.'' தேவனுக்கு எப்படி ஒரு தாய் இருக்க முடியும்? தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை வயிற்றில் சுமந்தாள். எந்த ஒரு ஸ்திரீயும் சிருஷ்டிக்க முடியாது. அவள் மனிதனின் வித்தை சுமக்கிறாள். மனிதனும் சிருஷ்டிக்கிறவன் அல்ல. தேவனே ஜீவனை சிருஷ்டிக்கிறவர். குழந்தைகளைத் தோன்றச் செய்ய அது தேவனுடைய வழக்கமான ஒழுங்காய் உள்ளது. அவள் தேவனுடைய தாய் அல்ல. தேவனுக்கு ஒருதாய் இருக்க முடியாது. ஏனெனில் அவருக்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் இல்லை. அவர் நித்தியமானவர். அவள் தேவனுடைய தாயாக இருக்க முடியாது. 75நான் அவளிடம், “நீங்கள் பெண் தெய்வமாகக் கருதும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகை நேற்றிரவு நீ கண்ட ஜனங்கள் நடந்து கொண்ட விதமாக நடந்து கொள்ளாமல், பரலோகத்தில் பிரவேசிக்க தேவன் சம்மதிக்கவில்லை என்று உன்னிடம் கூற விரும்புகிறேன்” என்றேன். அவள், அது உண்மையல்ல'' என்றாள். நான், ''கத்தோலிக்க சபை வேதாகமத்தை எழுதினது என்றும் அதை எழுதின அந்த அப்போஸ்தலர்கள் கத்தோலிக்கர் என்று என்னிடம் கூறுகிறாயா“ என்று அவளைக் கேட்டேன். அதை நான் எதிர்க்கிறேன். கடைசி அப்போஸ்தலன் மரித்து முன்னூறு ஆண்டுகள் கழித்து நிசாயா ஆலோசனை சங்கம் இருந்ததில்லை. வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து அதை எனக்குக் காண்பியுங்கள்; உங்கள் சபை பிரமாணப் புத்தகத்தை அல்ல (catechism). ஏனெனில் அது வரலாற்றுடன் ஒத்துப் போவதில்லை. அப்படி ஒன்று இருந்ததே கிடையாது. நான் அவளிடம், இயேசுவின் தாயாகிய மரியாளும் மற்ற ஸ்திரீகளும் நூற்றிருபது பேர்களில் ஒருவராய் படிக்கட்டுகள் ஏறி மேலறைக்குச் சென்று பரிசுத்த ஆவியினால் நிறைந்து, குடிகாரரைப் போல் தள்ளாடி, அந்நிய பாஷைகளைப் பேசி குடிகார கும்பல் போன்று நடந்து கொண்டதாக வேதம் கூறுகிறது'' என்றேன். அப்படித் தான் வேதம் கூறுகிறது. அந்த வசனத்தை என் விரலினால் சுட்டிக்காட்டி, ''இதைப் படி” என்றேன். அவளோ, ''நான் படிக்க மாட்டேன், அதை நான் படிக்கக் கூடாது“ என்றாள். 76நான், ''அப்படியானால் நீ உண்மையாயிருக்கவில்லை. இதோ கன்னி மரியாள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷைகள் பேசி, குடித்து வெறித்த ஸ்திரீயைப் போல் தள்ளாடினாள். அவள் சென்றது போல், நீ பரலோகத்துக்குச் செல்ல முடியாது. ஏனெனில் அதற்காக அவள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டியதாயிருந்தது. இயேசு கிறிஸ்துவின் தாயே பரிசுத்த ஆவியைப் பெற வேண்டிய அவசியம் இருந்தால், உனக்கு அது இன்னும் எவ்வளவு அவசியமாயுள்ளது?'' என்றேன். அவள், ''அதை பெற்றுக் கொண்டால் தான் நான் பரலோகம் செல்ல முடியுமானால், எனக்கு பரலோகத்துக்கு செல்ல விருப்பமில்லை'' என்று கூறினாள். நான், ''உனக்குக் அதைக் குறித்து கவலை வேண்டாம். நீ மாறினாலொழிய நீ எப்படியும் போக மாட்டாய் என்று எண்ணுகிறேன். அங்கு கூச்சல் அதிகமாக இருக்கும். நீ கவலைப்பட வேண்டாம்'' என்றேன். அது தான் தேவனுடைய ஆவி. 77''பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்த பிறகு நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.'' இது என்ன, நாம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம்? அது என்ன? அதை நிறுவினது யார்? அதன் செய்தி என்ன? இப்பொழுது நாம் வேகமாக மற்றவைகளைத் பார்ப்போம். நான்காவதாக, நாம் எவ்விதம் அதன் அங்கத்தினராவது? அதில் நாம் எவ்விதம் சேர்ந்து கொள்ள முடியும்? அது என்னவென்று நாம் அறிந்து கொண்டோம். அந்த சபையில் நாம் எவ்விதம் சேர்ந்து கொள்வது? நீங்கள் அதில் சேருவதில்லை. நீங்கள் அதில் சேர முடியாது. அதில் சேர்ந்து கொள்ள ஒருவழியும் இல்லை. நீங்கள் அதில் பிறக்கிறீர்கள். நான் பிரன்ஹாம் குடும்பத்தில் ஐம்பத்தோரு ஆண்டுகளாக இருக்கிறேன். அந்த குடும்பத்தில் நான் சேர்ந்து கொள்ளவில்லை. நான் ஒரு பிரன்ஹாமாகப் பிறந்தேன். நீங்களும் தேவனுடைய குமாரராக, தேவனுடைய குமாரத்திகளாக அதில் பிறக்கிறீர்கள். 78இப்பொழுது நாம் சிறிது நேரம் யோவான்: 3ம் அதிகாரத்தை எடுத்து, அதைக் குறித்து தேவன் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம். இந்த சபையில் நீங்கள் எப்படி பிரவேசிக்கிறீர்கள்? அதைக் குறித்து தேவன் உங்களுக்கு அளிக்கும் ஆலோசனை என்ன? யோவான் சுவிசேஷம் 2ம் அதிகாரம். 1 முதல் 8 வசனங்கள். யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்திலே வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 79நாம் அதற்குள் எப்படி பிரவேசிப்பது? அதற்குள் பிறக்க வேண்டும். நாம் தொடர்ந்து இந்த கேள்வியை படிப்போம். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர் வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன்தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். பாருங்கள் அந்த மாம்சப் பிரகாரமானவன், ஒரு போதகன், ஒரு மகத்தான மனிதன், வயது முதிர்ந்தவன், தன் வாழ்நாள் முழுவதுமாக வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான் இப்பொழுது, இன்றைக்கு இருக்கின்ற இந்த அறிவுப் பூர்வமான போதகர்கள் பிரசங்கிக்கக் கேட்பது போல இது இருக்கிறது அல்லவா? இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும்... (அதற்குள் நாம் எப்படி பிரவேசிப்பது?)... ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 80அதில் சேர்ந்து கொள்ள முடியுமா? நீங்கள் அதில் சேர்ந்து கொள்ள முடியாது. நீங்கள் அதில் பிறக்க வேண்டும். “வந்து சேருங்கள்'' என்றல்ல, ”வந்து பிறவுங்கள்“ மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். பாருங்கள், நீங்கள் அதில் சேர்வதில்லை. அது ஒரு பரம் ரகசியம். நீங்கள் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரத்துக்குள் பிறக்கிறீர்கள். அவ்விதம் தான் நீங்கள் அதற்குள் பிரவேசிக்கிறீர்கள். 81கொரிந்தியர்: 12ம் அதிகாரம். இன்னும் சிறிது தொடர்ந்து செல்வோம், இன்னும் சிலவற்றை வைத்திருக்கிறேன். என்னால் கூடுமானால் இதையும் சொல்லி முடித்து விடுகிறேன். நீங்கள் சிறிது நேரம்.... உஷ்ணமாயுள்ளது என்றறிவேன். இங்கு ஒரு நிமிடம் தொடங்குவோம். 1 கொரிந்தியர்: 12ம் அதிகாரம் 13ம் வசனம். ஒரு கைகுலுக்குதலினாலும், ஒரு உறுதி பிரமாணத்தினாலும்! ''நான் மகத்தான பரிசுத்த ரோமன் சபையை விசுவாசிப்பதாக உறுதி பிரமாணம் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி, கைகுலுக்கி, ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து, உங்கள் பெயரைப் பதிய செய்து கொள்வதா? நீங்கள் கிழவிகளின் பிறந்தநாள் பஞ்சாங்கத்தில் அதைப் படிக்கலாம், ஆனால் அவ்விதம் தேவனுடைய வேதாகமத்தில் படிப்பதில்லை. ஆம் ஐயா. ஆம். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே (ஒரே ஸ்தாபனத்துக்குள்ளாக?) ஒரே சரீரத்திற்குள்ளாக (சேர்ந்து கொண்டு, பதிவு செய்து கொண்டு?) ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்படுகிறோம். மெதோடிஸ்டு ஆவி, பாப்டிஸ்டு ஆவி, பெந்தெகொஸ்தே ஆவியினால் அல்ல, ஆனால் ஒரே பரிசுத்த ஆவியினால்நாமெல்லாரும் இம்மானுவேலின் இரத்தக் குழாய்களில்லிருந்து எடுக்கப்பட்ட, இரத்தம் நிறைந்த ஊற்றில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், அங்கு பாவிகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கி தங்கள் குற்றமுள்ள கறைகளை போக்கிக் கொள்கின்றனர், மரித்துக் கொண்டிருந்த கள்ளன் தன் நாளில் அந்த ஊற்றைக் கண்டு களிகூர்ந்தான்; நானும் அவனைப் போல் தீயவனாயிருந்த போதிலும், அங்கே என் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்கிறேன். 82ஒரே சரீரம்! அந்த சரீரத்துக்குள் நாம் எப்படி வருகிறோம். அதற்குள் நாம் எப்படி பிரவேசிக்கிறோம்? ஒரே ஆவியினால் ஒரே சரீரத்துக்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். அந்த சரீரத்துக்குள் நாம் இருக்கும் போது, சுயாதீனராக, உயிர்த்தெழுதலின் உறுதியைப் பெற்றிருக்கிறோம். கர்த்தர் நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.'' ''ஒரு கைகுலுக்குதலினால் அல்ல. “ஒரு சபை கடிதத்தினால், அல்ல. ஆனால் ஒரே பரிசுத்த ஆவியினால் யூதர் புறஜாதியினர். மஞ்சள் நிறத்தவர். கறுப்பு நிறத்தவர். வெள்ளையர் எல்லாருமே அவருடைய சொந்த இரத்தத்தின் உடன்படிக்கையின் மூலம், ஒரே ஆவியினால் அந்த ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகின்றனர். ''நான் இரத்தத்தைக் காணும் போது, உங்களைக் கடந்து போவேன்.'' நாம் மரணத்தினின்றும் வேதனையினின்றும் பாவத்தினின்றும் விடுதலை அடைந்துள்ளோம். ''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் பாவஞ் செய்யமாட்டான். ''பாவமே இல்லை! ”பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்,'' என்று இயேசு கூறினார். நீங்கள் எவ்விதம் பூரண சற்குணராக முடியும்? உங்களால் முடியாது. நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் சொல்லுகிறவர்களாய் இவ்வுலகிற்கு வந்தீர்கள். ஆனால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் பாவத்தை சுமப்பவராய் விசுவாசத்தில் ஏற்றுக் கொண்டு, அவர் உங்களை இரட்சித்தார் என்றும், உங்கள் இடத்தில் அவர் மரித்து உங்கள் பாவங்களை சுமந்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்கும் போது, தேவன் உங்களை ஏற்றுக் கொண்டு, சரீரத்திற்குள் உங்களை ஞானஸ்நானம் பண்ணி, உங்கள் பாவங்களை இனி காணாமல் இருப்பார். எனக்காக பலிபீடத்தின் மேல் பாவ நிவாரண பலி இருக்கும் போது, நான் எப்படி பாவியாக இருக்க முடியும்? 83நான் எந்த வேகத்திலும் காரோட்டி செல்லலாம் என்று நகரத்தின் சட்டங்கள் எனக்கு உரிமை அளித்திருந்தால், போலீஸ்காரன் என்னை எப்படி கைது செய்ய முடியும்? நீங்கள் என்னைக் கைது செய்ய முடியாது. நகராண்மைத் தலைவர், “சங்கை பிரான்ஹாமே, நீங்கள் வியாதியஸ்தரின் அழைப்பை ஏற்று செல்கிறீர்கள். ஆகவே எந்த பகுதியிலும் நீங்கள் விரும்பும் வேகத்தில் காரோட்டிச் செல்லலாம் என்று ஒரு சிபாரிசு கடிதம் எனக்குக் கொடுத்திருந்தால், போலீஸ்காரன் எவனும் என்னைக் கைது செய்ய முடியாது. ஏனெனில் நகராண்மைத் தலைவரே, அவசர நேரத்தில் தவிர மற்ற நேரத்தில் நான் வேகக் கட்டுப்பாட்டை மீறமாட்டேன் என்னும் நம்பிக்கையயை என் மீது கொண்டுள்ளார். அது போல, தேவன் என்னை ஏற்று கொண்டு என்னை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்திருந்தால், நான் மனப்பூர்வமாய் பாவம் செய்ய மாட்டேன் என்னும் நம்பிக்கையை என் மீது கொண்டுள்ளார். ஆமென் நான் மனப்பூர்வமாய் பாவம் செய்ய மாட்டேன். எனவே, அவருடைய குமாரன் எனக்காக பாவ நிவாரண பலியாக தம்மைச் செலுத்தினார். நான் நீதிமானாக்கப்பட்டு, அவருடைய சரீரத்தில் ஏற்றுக் கொண்டிருக்கும் வரைக்கும், நான் பாவியாக இருக்க முடியாது. நான் அவருடன் மீட்கப்பட்டு விட்டேன். நான் என்ன செய்கிறேன் என்றல்ல, அவர் எனக்காக என்ன செய்தார் என்பது தான் முக்கியம். அது தான் சுவிசேஷம். 84''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்“ என்று எபே.4:30 உரைக்கிறது. அண்மையில் பிரசித்தி பெற்ற ஒரு பாப்டிஸ்டு போதகர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. தேவனை விசுவாசிப்பதற்கு மேலாக அவன் என்ன செய்ய முடியும்? நாங்கள் விசுவாசிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்“ என்றார். நான் உங்கள் கருத்து தவறு, உத்தமமாக நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். மனம் மாறின ஒரு வழக்கறிஞரை சிறந்த போதகராக பெற்றிருந்த அந்த பாப்டிஸ்டுகளிடம், பவுல் அப்போஸ்தலர்: 19ம் அதிகாரத்தில், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு (ஆங்கில வேதாகமத்தில் (“since ye believed?”) பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்டான்“ என்றேன். அவர், ''மூல வேதாகமம் அவ்விதம் கூறவில்லை'' என்றார். நான், “அது நிச்சயம் அவ்வாறு கூறுகின்றது. என்னிடம் மூல கிரேக்க மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்ட்ட ''எம்பாடிக் டயக்ளாட்'' உள்ளது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் அப்படித்தான் கூறுகிறது. அவன், ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். ஆபிரகாம் விசுவாசித்தான் என்பது உண்மையே. ஆனால் அவன் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, தேவன் அவனுக்கு விருத்தசேதனம் என்னும் முத்திரையை அளித்தார்” என்றேன். அது உண்மை. தேவன் அவனை ஏற்றுக் கொண்டார், அவனை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். நீங்கள் விசுவாசிப்பதாக கூறிக் கொண்டு, பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், தேவன் உங்களை இன்னும் முத்தரிக்கவில்லை, உங்கள் மேல் அவருக்கு போதிய அளவு நம்பிக்கை இல்லை. நீங்கள் தேவனிடத்தில் வரும் போது, அவர் உங்களை மீட்கப்படும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியால் முத்தரிக்கிறார். அது சபையின் செய்தி. ஆமென். 85இன்னும் சிறிது தொடர்ந்து, சரி. இப்பொழுது, 1கொரிந்தியர்; 12:13, “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.'' அப்போஸ்தலருடைய நடபடிகள்; அந்த வழியாகத்தான் நாம் உள்ளே பிரவேசித்தோம். அப்போஸ்தலர்; 2ம் அதிகாரத்தில், சபையின் துவக்கம் காணப்படுகிறது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு முதலாம் செய்தி சபைக்குப் பிரசங்கிக்கப்பட்ட போது, அவர்கள் எல்லோரும் - மரியாள், அப்போஸ்தலர் அனைவரும் - பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அந்நிய பாஷைகள் பேசி, குடிகாரக் கூட்டம் போல் நடந்து கொண்டனர். ஸ்திரீகளுக்கு மற்றவர் பரிகசிக்கும் நேரம் உண்டாயிருந்தது. அவர்கள் கூச்சலிட்டு, தேவனைத் துதித்து, பரிசுத்த ஆவியின் பாதிப்பால் தள்ளாடினர். அது ஞாயிற்றுக்கிழமையோ, திங்கட்கிழமையோ, அது எந்த நாள் என்று அவர்கள் கவலை கொள்ளவேயில்லை. அவர்கள் கூச்சலிட்டு, இவ்விதம் நடந்து கொண்டு, அருமையான தருணத்தைப் பெற்றிருந்தனர். மகத்தான அறிவாளிகள் அதைக் கண்ட போது, இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்“ என்றனர். 86அங்கு பேதுரு இராஜ்யத்தின் திறவு கோல்களை, பரிசுத்த ஆவிக்கான திறவு கோல்களை, பக்கவாட்டில் தொங்கவிட்டு நின்று கொண்டிருந்தான். இயேசு அவனை நோக்கி, ''நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' என்றார். அது என்ன? ஆவிக்குரிய விதமாய் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம். ''மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. (இதை நீ வேதாகமக் கல்லூரியில் கற்கவில்லை. இதை யாரும் புத்தகங்களிலிருந்து உனக்கு கற்றுக் கொடுக்கவில்லை. இது ஒருவெளிப்பாடு) வெளிப்பாடு! ''நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய். ராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டுவேன். நீ கட்டவிழ்ப்பது எதுவோ அதை நான் பரலோகத்தில் கட்டவிழ்ப்பேன். அவர் தமது வார்த்தையை நிறைவேற்ற வேண்டும். பெந்தெகொஸ்தே நாளில் பேசுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தவன் யார்? (spokesman) பேதுரு. ஏனெனில் அவன் திறவு கோல்களை உடையவனாயிருந்தான். 87அவர்கள், இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்று பரியாசம் பண்ணினார்கள். அப்பொழுது பேதுரு, “பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே, இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. ''கடைசி நாட்களில் நான் மாம்சமானயாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். அல்லாமலும், உயர வானத்திலேயும் தாழப் பூமியிலேயும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காட்டுவார்கள். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற வனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்'' என்றான். இதை அவர்கள் கேட்ட பொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து, சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்றார்கள். அதுவே சபையின் கட்டளை. வேறு விதமாகக் கூறினால், இந்தக் காணக்கூடாத சரீரத்திற்குள் நீங்கள் எப்படி பிரவேசிப்பது என்பதை கண்டு கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். சரி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 2ம் அதிகாரம், 37ம் வசனம் தொடங்கி, துவக்கப் பிரசங்கம். அதை நீங்கள் மாற்ற முடியாது. அதை நீங்கள் மாற்ற முடியாது. கவனியுங்கள். 88உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்து, நீங்கள் மருந்துக் கடையில் அறைகுறை மருந்து தயாரிப்பவன் ஒருவனிடம் செல்வீர்களானால், அவன் அந்த மருந்து சீட்டில் எழுதப்பட்டுள்ள மருந்தை சரியாக தயாரிக்காமல் உங்களைக் கொன்று போட முடியும். பாருங்கள். மருத்துவர் ஒவ்வொன்றும் இவ்வளவு அளவு என்று எழுதுகிறார். ஏனெனில் அப்படி செய்ய அவர் பயிற்சி பெற்றிருக்கிறார். எனவே அவர் மருந்துச்சீட்டில், இவ்வளவு விஷம் என்று எழுதுகிறார். அந்த விஷத்தில் குறிப்பிட்ட அளவு விஷத்தைக் குறைக்க மாற்று மருந்து ஒன்றை எழுதுகிறார். மருத்துவர் எழுதின விதமாகவே அந்த மருந்தை தயாரிக்காமல் போனால் அது உங்களைக் கொன்று விடும். 89தேவன் தான் மருத்துவர். அவர் ஆத்துமாவுக்கு மருத்துவராயிருக்கிறார். அவர் இரட்சிப்புக்கு மருத்துவராயிருக்கிறார். அவர் படிப்பறியாத மனிதனாகிய பேதுருவுக்கு தமது சொந்த வேதசாஸ்திரத்தை புகட்டினார். அவனுடைய பெயர் எழுதப்பட்டு அவனுக்குக் காண்பிக்கப்பட்ட போது, அவனுக்கு அதை படிக்கவும் கூட தெரியவில்லை. ஆனால் தேவன் அவனுக்கு பரிசுத்த ஆவியை அருளி, இந்த உபதேசத்தை எழுத அதை பென்சிலாகக் கொடுத்தார். எனவே பெந்தெகொஸ்தே நாளில் அவன் இந்த மருந்துச் சீட்டை எழுதினான். டாக்டர் சீமோன் பேதுரு என்ன எழுதினான் என்று பார்ப்போம். உங்கள் இரட்சிப்புக்கான மருந்துச் சீட்டு என்னவென்று காண்போம். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக் காண்போம். இதை அவர்கள் கேட்ட பொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். (கவனமாயிரு, உன்னிடம் திறவுகோல் உள்ளது). பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி. அது தான் மருந்து சீட்டு அதை மாற்றி எழுதாதீர்கள், அது உங்கள் நோயாளியைக் கொன்று போடும். ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொண்டுள்ள அநேகரிடம் உள்ள விஷயம் இதுவே. அவர்கள் தவறான மருந்துச் சீட்டினால் ஆவிக்குரிய மக்கள் அநேகரை கொன்று போடுகின்றனர். அப்படி ஒன்றுமேயில்லை. 90யாருக்குமே வேதத்தில், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை. கத்தோலிக்க சபை நிறுவப்பட்ட வரைக்கும், அப்படிப்பட்ட ஞானஸ்நான ஆராதனை நடந்ததே கிடையாது. கத்தோலிக்க சபை தான் அதற்குத் தாய். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள், உண்மையைக் கண்டு கொள்ளுங்கள். முதன் முதலாக ''பிதா, குமாரன், பரிசுத்தஆவி'' என்னும் ஒழுங்கைக் கடைபிடித்தவர் ஒரு கத்தோலிக்க குருவானவரே. அவர்கள் தெளிக்கின்றனர். வேசிகளின் தாயாகிய கத்தோலிக்க சபை தான் இந்த மதுவைக் குடிக்கக் கட்டளையிட்டது. நாம் மீண்டும் ஒரு வேசிக்கு வந்திருக்கிறோம். கத்தோலிக்க சபை பிரமாணத்தில், ஒரு பிராடெஸ்டெண்ட் எப்பொழுதாவது இரட்சிக்கப்பட வாய்ப்புண்டா? என்னும் கேள்விக்கு, ''சில நேரங்களில் வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்கள் கத்தோலிக்க உபதேசத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்கின்றது. கத்தோலிக்கர் வேதாகமத்தை எடுப்பதில்லை. அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். அதை ஆதரிக்கும் எந்த வேத வசனமும் அவர்களிடம் இல்லை. கத்தோலிக்க சபை தான் அதை தொடங்கினது. அவர்கள் அதை ஒப்புக் கொள்கின்றனர். ''கத்தோலிக்க ஒழுங்கின் படி, சிலர் இரட்சிக்கப்படக் கூடும். அப்படி ஒன்றுமில்லை யாருமே அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. யாருமே வேதத்தில் தெளிக்கவோ, ஊற்றவோ, அல்லது வேறெந்த வகையிலோ ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. அவர்கள் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மாத்திரமே தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் கொடுத்தனர். நான் சற்று முன்பு எதைப் படித்துவிட்டு, அதை பிறகு பார்க்கலாம் என்று கூறினேன்? மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை. எங்கே? எருசலேமிலே, யூதர்களுக்கு மட்டுமா? எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும், முழு உலகிற்கும். 91டாக்டர் சீமோன் பேதுரு அந்த மருந்துச் சீட்டை எழுதினான். டாக்டர்களே, உங்களைக் குறித்தென்ன? அதனுடன் எதையோ சேர்க்க ஏன் முயற்சி செய்கிறீர்கள்? அதனுடன் ஒன்றையும் சேர்க்காதீர்கள். அது உள்ள விதமாகவே அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அது தான் சபையின் கட்டளை. அப்படித் தான் நீங்கள் அதற்குள் பிரவேசிக்கிறீர்கள் - நீங்கள் மனந்திரும்பி, உங்கள் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள் என்னும் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறீர்கள். வேதமும் அவ்விதம் உரைக்கிறது. ''சபைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுதல், சபைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுதல்“ என்று. 92ஒரு நிமிடம் கலாத்தியர்; 3:26ஐப் படிப்போம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு - மூன்று காரியங்கள் உள்ளன. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம். இப்பொழுது நாம் கலாத்தியர்; 3:26ஐப் படிப்போம். எனக்கு முன்பு யாராகிலும் அந்த வேதபாகத்தை எடுக்க நேர்ந்தால், அதை வாசியுங்கள். (ஒரு சகோதரி வாசிக்கிறாள்). ''நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே“ - ஆசி). கலா; 3:26. ஒருக்கால் அதை நான் தவறாக குறித்து வைத்திருக்கக் கூடும். அது கொலோசெயர்; 3:26ஆ என்று பார்ப்போம். கொலோசெயரில்; 3:26 கிடையாது. அப்படியானால் அது எந்த வசனம், கலா. 3:26 ஆ? இதோ நான் கண்டு பிடித்து விட்டேன். அது சரியே. சகோதரியே. நீ தொடங்கினதால் தொடர்ந்து படி. கலா. 3:26. அது 26, 27, 28 வசனங்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். (அந்த சகோதரி கலா. 3: 26-28 வசனங்களைப் படிக்கிறாள் - ஆசி). நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானனம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். இந்த சரீரத்திற்குள் நாம் எப்படி பிரவேசிக்கிறோம், நாம் எப்படி அதைச் செய்தோம்? பரிசுத்த ஆவியினால் கிறிஸ்து இயேசுவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுதலின் மூலம். 93சபைக்குள் எப்படி பிரவேசிப்பது என்னும் சபையின் மற்றொரு செய்தி, பரிசுத்தமாக்கப்படுதலின் மூலம். பரிசுத்தமாக்கப்படுதல் எபி. 13: 12, 13 வசனங்கள். ''அந்தப்படியே இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' இப்பொது நாம் எபேசியர் நிரூபத்துக்குச் செல்வோம். இதை நாம் படிக்க வேண்டும். எபேசியர் 5:25, வேகமாக படிப்போம். சரி, இதோ 5:25, இல்லை, நான் மறுபடியும் தவறான வசனத்தை எடுத்துவிட்டேன். அதை சரியாக எழுதி வைக்கவில்லை. இப்பொழுது பார்ப்போம். எனவே போதகர்களும் குருவானவர்களும்... ஓ, ஆமாம். இதை வேகமாக குறித்துக் கொண்டதனால், இதை தவறாக வைத்திருக்க வகையுண்டு. ஓ, நான் தவறான பக்கத்தை எடுத்து விட்டேன். ஆமென். ஆம். சரி. 94எபிரெயர் 13: 12, 13, ''அந்தப்படியே இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே , ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.'' எனவே, ஜனங்கள்: இப்படித்தான் நாம் சபைக்குள் வருகிறோம் - மனந்திரும்பி, நம்முடைய பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதலின் மூலம். அப்பொழுது நாம் பரிசுத்த ஆவியைப் பெறுவோம் என்னும் வாக்குத்தத்தம் நமக்குள்ளது. எனவே எந்த போதகரும் கைகுலுக்குவதன் மூலம் நம்மை அதற்குள் பிரவேசிக்கச் செய்ய முடியாது. எந்த குருவானவரும் நம்மை உறுதி பிரமாணம் எடுக்கச் செய்து அதில் பிரவேசிக்கச் செய்ய முடியாது. ஆனால் நாம் மேசியாவின் ராஜ்யத்தின் ராஜாவின் மூலம் அதற்குள் பிறக்கிறோம். ஆமென். இப்பொது இந்த ஒன்று மாத்திரம்; இன்னும் ஒன்றைக் கூறிவிட்டு, நாம் செல்லலாமா? எத்தனை பேர் இன்னும் சில நிமிடங்கள் என்னுடன் தங்கியிருப்பீர்கள்? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி). ஆம். ஐயா. இப்பொழுது ஒன்பதரை மணி. நேரம் கடந்துவிட்டது. 95இப்பொழுது, சபையில் இல்லாமல் நாம் பரலோகத்திற்கு செல்ல முடியுமா? இதைக் குறித்து ஓரிரண்டு குறிப்புகளை எடுத்துரைக்க விரும்புகிறேன். நான் குறைந்த பட்சம் ஒரு டஜன் குறிப்புகளை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நான் - நான்... இந்த ஒன்று மாத்திரம், இதை நாம் அறிந்து கொள்வதற்காக. இல்லை, ஐயா, நீங்கள் இந்த சபையின் அங்கத்தினராய் இராமல் பரலோகத்திற்கு செல்ல முடியாது. இப்பொழுது, முதலாவதாக, யோவான்;3:5. இயேசு, ''ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், (மனந்திரும்பி, பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் ஆவியினால் பிறப்பீர்கள்), ஜலத்தினால் பிறவாவிட்டால், ஆவியினால் பிறவாவிட்டால். ஒரு மனிதன் இதை பெற்றுக் கொள்ளாமல் போனால், அவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்'' என்று கூறினார். அப்படியானால், நீங்கள் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தால், நீங்கள் சபையில் இருக்கிறீர்கள். நீங்கள் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், நீங்கள் சபையில் இல்லை, நீங்கள் பரலோக ராஜ்யத்தைக் காணவும் மாட்டீர்கள், இது உங்களுக்கு அர்த்தமாகிறதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இது முற்றிலும் உண்மை. 96இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா..... நீங்கள், ''நல்லது, சகோ. பிரன்ஹாமே, நான் விசுவாசிக்கிறேன், (நல்லது, கவனியுங்கள்) நான் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேயில்லை, இல்லை.'' அப்படியானால் நீங்கள் இன்னும் விசுவாசிக்கவில்லை. நீங்கள் விசுவாசத்தை நோக்கி விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனெனில் 1.கொரிந்தியர்; 12ம் அதிகாரம் 3ம் வசனத்தில்; உங்களுக்கு விருப்பமானால், அதை வேகமாக எடுத்துப் படிப்போம், அந்த வசனத்துக்கு அருகில் நாம் இருக்கிறோம். 1.கொரிந்தியர்; 12, 12ம் அதிகாரம் 3ம் வசனம். அதை வேகமாக எடுத்து படித்து, அதில் கர்த்தர் நமக்கு என்ன வைத்திருக்கிறார் என்று காண்போம். 1.கொரிந்தியர் 12, சரி, 3ம் வசனம். ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கபட்டவனென்று சொல்ல மாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாதென்றும், உங்களுக்குத் தெரியுமே. 97நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும், அதைக் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள், நான் இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்'' எனலாம். ஆனால் நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? இல்லையென்றால், நீங்கள் அவரைக் கர்த்தர் என்று அழைக்கவே முடியாது. ஏனெனில் அவர் உங்களுக்கு கர்த்தர் அல்ல, அவர் நீங்கள் விசுவாசித்ததில் ஏற்றுக் கொண்ட சரித்திரப் பிரகாரமான ஒருவர். ஆனால் அவர் பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் வரும் போது அவர் உங்கள் கர்த்தராகிவிடுகிறார். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாது - நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்து பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருந்தால் மட்டுமே. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், அவருடைய ராஜ்யத்தில் நீங்கள் பிறந்து, சபையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் வெளியே அழைக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். உங்களால் இதை காண முடிகிறதா? சரி, இப்பொழுது. 98தானியத்தில் ஜீவன் இல்லாமல், ஜீவன் தானியத்தை விட்டு புறப்பட்டு வர முடியுமா? தானியத்தை நிலத்தில் விதைக்கையில், ஒரு தானியத்துக்கு ஜீவன் உள்ளது, மற்றொன்று ஜீவன் இல்லாமல் உள்ளது. முளைக்காத தானியம் மறுபடியும் உயிர் பெறுமா? எவ்விதத்திலும் முடியாது. ஏனெனில் அதில் ஒன்றுமே இல்லை. அது ஜீவன் உள்ளதைப் போலவே தானியச் சீவல் (corn flakes) உண்டாக்கிக் கொள்ளலாம். இதை உபயோகித்து ரொட்டி செய்யலாம். மற்றதைப் போலவே இது அலமாரியில் நல்லதாக இருக்கும். ஆனால் அதில் ஜீவன் இல்லாமல் போனால், அது மறுபடியும் எழும்ப முடியாது. அது போன்று, ஒரு மனிதன் கிறிஸ்தவனைப் போலவே நல்லதொரு ஸ்தாபன அங்கத்தினனாயிருக்கலாம். இந்த நல்ல மனிதன் கிறிஸ்தவனைப் போலவே நல்ல குடிமகனாக, ஒழுக்கமுள்ள மனிதனாக இருக்கலாம். ஆனால் அவன் மரிக்க நேர்ந்தால், அவன் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்காமலிருந்தால்: ஏனெனில் துவக்கம் உள்ள ஒவ்வொன்றிற்கும் முடிவு உண்டு. 99தேவன் ஒருவர் மாத்திரமே நித்தியமானவர். எனவே, அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நாம் தேவனின் ஒரு பாகமாயிருக்கின்றோம். இயேசு, ''நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்'' என்றார். அங்கு உபயோகிக்கப்பட்ட கிரேக்கச் சொல் ''சோ'' (zoe) என்பதற்கு ''தேவனுடைய சொந்த ஜீவன்“ என்று பொருள். நீங்கள் மறுபடியும் பிழைக்கக் கூடிய ஒரே வழி தேவனுடைய ஜீவனாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதே. ஏனெனில் உங்கள் ஜீவன் அழிந்து போகும். ஆனால் அவருடைய ஜீவன் மறுபடியும் எழுப்பப்படும். ஏனெனில் தேவன் நித்தியமானவர். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் எப்படி மரிக்க முடியாதோ, அப்படியே நீங்களும் மரிக்க முடியாது. ஆ, ''என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். அவனுக்குள் இருக்கும் நித்திய ஜீவன் அவனை எழுப்பும்.'' 100இப்பொழுது, சபையில் இல்லாமல் நாம் பரலோகத்தில் பிரவேசிக்க முடியுமா? நீங்கள் மறுபடியும் பிறவாமல் சபையில் இருக்க முடியாது. நீங்கள் மறுபடியும் பிறவாமல் பரலோகம் செல்ல முடியாது. நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால் சபையில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சபையின் அங்கத்தினராயிராமல் பரலோகம் செல்ல முடியாது. நீங்கள் மறுபடியும் பிறவாமல் அதன் அங்கத்தினராயிருக்க முடியாது. இப்பொழுது உங்களைச் சிறிது திணறச் செய்யப் போகின்றேன். தேவன் உங்களை அங்கத்தினராயிருக்க அழைக்காமல் போனால், நீங்கள் அங்கத்தினராயிருக்க முடியாது. நீங்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே முன்குறிக்கப்பட்டு விட்டீர்கள் என்பதைக் குறித்து எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! உங்கள் பெயர்... வியூ உங்கள் பெயர்கள் சபை புத்தகமாகிய ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் உலகத் தோற்றத்துக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன. அப்படித் தான் வேதம் உரைக்கிறது. அந்திக்கிறிஸ்து - கத்தோலிக்க சபையும் மற்ற ஸ்தாபனங்களும் - ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராதவர்கள் - ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராதவர்களை மோசம் போக்குவான் என்று வேதம் உரைக்கிறது. இயேசு, ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்'' என்றார். அது அவருடைய சொந்த வார்த்தை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்றல்ல, அவர் என்ன செய்தார் என்பதே முக்கியம். 101அதை நாம் ஒரு நிமிடம் தீர்மானித்து விடுவோம். நாம் வேகமாக எபேசியர் முதலாம் அதிகாரத்திற்கு திருப்புவோம். இதைக் கேளுங்கள், இது பவுல் உரைப்பது. பவுல் கிறிஸ்தவர்களுக்கு இதை எழுதுகிறான். இங்கு எத்தனை கிறிஸ்தவர்கள் உள்ளனர், உங்கள் கைகளைக் காணட்டும்? சரி, இது பாலகர்களுக்கு அல்ல, இது மாம்சம் புசிக்கக் கூடியவர்களுக்கு. முதலாம் அதிகாரம், யாருக்கு இதை எழுதுகிறான் என்பதைக் கவனியுங்கள்: தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல் (பேராயர் குரு பட்டம் கொடுத்ததனால் அல்ல, அல்லது ஸ்தாபனங்கள் அவ்விதம் செய்ததனால் அல்ல).... அப்போஸ்தலனாகிய பவுல் (அப்போஸ்தலன் என்றால் தேவனுடைய சித்தத்தினால் அனுப்பப்பட்டவன்) எபேசுவிலுள்ள கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:(அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் அல்லது பரிசுத்தவான்கள்). இதை அவன் யாருக்கு எழுதுகிறான்? சபையில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும் போது, அவருடைய சரீரத்திற்குள் இருக்கிறீர்கள். அது சரியா? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி ) அப்பொழுது நீங்கள் சபையின் அங்கத்தினராயிருக்கிறீர்கள். 102நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக: நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் எப்படி அதை செய்தார்? அவர் என்ன செய்தார்? அவர்கள் யோர்தானை அடைந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கடந்து சென்று, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே வீற்றிருந்தனர். இதோ அது, ''உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார்'' கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களை சபையாக வெளியே அழைத்து அவர்களுக்கு வார்த்தையை போதித்தல். கிறிஸ்து இயேசுவுக்குள் பிறந்த சபையாகிய நாம் அவருடன் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம். வெளியே அழைக்கப்பட்டவர்களுக்கு, ஓ, என்னே, நீங்கள் ஒன்றைப் போதிக்க முடியும். கொரிந்து சபையுடன் பவுலுக்கு நிறைய தொல்லைகள் இருந்தன. ஆனால் இந்த எபேசு சபையுடன் அல்ல. இவர்களுக்கு அவனால் மகத்தான காரியங்களைப் போதிக்க முடிந்தது. சரி. 103நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் நம்மை..... (என் கடைசி இரண்டு செய்திகள் ஞாபகமுள்ளதா?) கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார். (கவனியுங்கள், இது உங்களுக்கு அதிர்ச்சியை விளைவிக்கும்). தமக்கு முன்பான் நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே (அவர் கடந்த எழுப்புதல் கூட்டத்தில்? அதை நான் சரியாக படித்தேனா? தெரிந்து கொண்டார் - ஆங்கிலத்தில் “hath chosen''- இறந்த காலம்). மு-ன்-கு-றி-த்-தி-ரு-க்-கி-றா-ர். நான் என்ன செய்தேன்? ஒன்றும் செய்யவில்லை. அவர் செய்ததை நான் நோக்கிக் கொண்டிருக்கிறேன். அவர் என்ன செய்தார்? நம்மை முன் குறித்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் நமது பெயர்களை அவருடைய புத்தகத்தில், அவருடைய சபை புத்தகத்தில் எழுதி வைத்து, இந்த காணக்கூடாத சரீரத்தின் அங்கத்தினராயிருக்கும்படி செய்துவிட்டார். தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தமக்குச் சுவீகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். 104வ்யூ! நீங்கள் செல்ல வேண்டுமானால், சகோதரனே, அந்த சபையில் நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு சபைக்காக வரப்போகிறார். எவ்விதமான சபை? கறைதிரை யற்ற சபை. நாம் எவ்வாறு அவ்விதம் இருக்க முடியும்? கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாய், பரிசுத்த ஆவியினால் காணக்கூடாத அவருடய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலம். தேவகுமாரனுடைய இரத்தம் தோய்ந்த பாவநிவாரண பலி ஒவ்வொரு மணி நேரமும் நமக்காக அங்கு கிடத்தப்பட்டிருக்கிறது. நாம் குற்ற மற்றவர்களாக காணப்படுகிறோம். அது தான் கறைதிரை யற்ற சபை அவர் நம்மை அவருக்குள் தெரிந்து கொண்டு, நம்முடைய பெயர்களை அவருடைய புத்தகத்தில் எழுதிவைத்தார். வேதம்,... ''இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர், என்கிறது. அவர் எப்பொழுது அடிக்கப்பட்டார்? ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா? எவ்வளவு முன்பு ? உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி''. 105தேவன் வேதாகமத்தில்; ஆதியாகமம்; 1ம் அதிகாரத்திலுள்ள வார்த்தை . “ஆதியிலே தேவன்...'' தேவன் என்னும் வார்த்தை எபிரெய மொழி வேதாகமத்தில் என்ன அர்த்தம் கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள். அது ஏல், ஏலா, ஏலோகீம் என்றுள்ளது. அப்படியென்றால், ''தன்னில் தானே ஜீவிக்கிறவர்'', ''எல்லாவற்றிற்கும் போதுமானவர்'', ''பெலமுள்ளவர்'' என்று பொருள். அவருக்கு முன்னால் ஒன்றும் இருந்ததில்லை. காற்றோ, நட்சத்திரங்களோ, எதுவுமே அவருக்கு முன்னால் இருந்ததில்லை. அவர் தேவனாக, நித்தியமானவராக இருந்தார். அவருக்குள் இரட்சகராக வேண்டிய, பிதாவாக வேண்டிய, தேவனாக வேண்டிய தன்மைகள் இருந்தன. அப்பொழுது அவர் தேவனாயிருக்கவில்லை. அவர் தேவன் தான். ஆனால் அவரைத் தொழுது கொள்ள எதுவும் இருக்கவில்லை. தேவன் என்றால் தொழுகைக்குரிய ஒன்று என்று பொருள். அவரைத் தொழுது கொள்ள அப்பொழுது எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவ்வாறிருக்க - இரட்சகராயிருக்க சுகமளிப்பவராயிருக்க, இன்னும் அவர் இப்பொழுதுள்ள மற்றவைகளாயிருக்க - அவருக்குள் தன்மைகள் இருந்தன. 106எனவே அவர் முதலாவதாக சிருஷ்டித்தது... உங்களில் சிலர் என் ஆதியாகமம் வரலாற்றை அறிய விரும்புவீர்கள். தேவன், ''நாம் மனுஷனை உண்டாக்குவோமாக'' என்றார். முதலாவதாக, அவரைத் தொழுது கொள்ள அவர் தேவ தூதர்களைச் சிருஷ்டித்தார். அப்பொழுது அவர் தேவனாக ஆனார். அவர், ''நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக'' என்றுரைத்த போது, அவர் எப்படிப்பட்ட மனுஷனை உண்டாக்கினார்? ''ஆவி மனுஷனை. அவர் அந்த மனுஷனை உண்டாக்கின போது, அவனுக்கு ஆளுகையைக் கொடுத்தார். அதன் பிறகு அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். அப்பொழுது அவன் விழுந்து போனான். அதன் பிறகு அவர் இரட்சகரானார் - தேவனாக, பிறகு இரட்சகராக. பாவம் வியாதியை விளைவித்தது. அப்பொழுது அவர் சுகமளிப்பவராக ஆனார். அல்லேலூயா எதுவுமே தவறாக நடக்கவில்லை, இதைக் குறித்தெல்லாம் அவர் உலகம் உண்டாவதற்கு முன்பே அறிந்திருக்கிறார். இன்றிரவு இக்கூட்டத்தை நாம் நடத்துவோம் என்று அவர் முன்னமே அறிந்திருந்தார். இவ்வுலகில் தோன்றவிருந்த ஒவ்வொரு ஈக்களையும் (gnats) அவை ஒவ்வொன்றும் எவ்வளவு பசை உற்பத்தி செய்யும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர் முடிவற்ற தேவன். அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆமென் உங்கள் பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதற்காக இன்றிரவு நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள். அல்லவா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி ). 107அந்த மகத்தான புள்ளியுள்ள பறவையைக் குறித்து எனக்கு எவ்வளவு அருமையான கருத்து உள்ளது! அதன் பெயர் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மற்ற பட்சிகள் அதைச் சுற்றிலும் வருகின்றன. அது மற்றவைகளால் நிந்திக்கப்படுகின்றது. அந்த புள்ளியுள்ள பறவையார்? அது தவறென்று உரைத்த அந்த ஆளுடன் எனக்கு கருத்து வேற்றுமை உள்ளது, வேதத்தில் கூறப்பட்ட அந்த புள்ளியுள்ள பறவை யார்? அது அவர்கள் கூறுவது போல் இஸ்ரவேலர் அல்ல, அது இயேசு கிறிஸ்துவின் சபை, பாவ நிவாரண பலிக்கு அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் இரண்டு காட்டுப் புறாக்களை எடுத்து, அவைகளில் ஒன்றின் தலையை வெட்டி, அதை தலைகீழாக வைத்து, அதை பறக்கவிட்டனர். செத்த புறாவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்ட இந்த புறா, பூமியெங்கும் பறந்து சென்று, தன் சிறகுகளை அடிக்கும் போது, இரத்தத்தை பூமியின் மேல் தெளித்து, ''கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்'' என்று சத்தமிட்டது. 108அது கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந்தது. அந்த மகத்தான புள்ளியுள்ள பறவை தான் சபை, அது மரித்த தன் ஜோடியான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் புள்ளியைப் பெற்றுக் கொண்டது. அது இன்று தன் சிறகுகளை அடித்துக் கொண்டு உலகைக் கடந்து, “கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம்'' என்று சத்தமிடுகிறது. ஆமென்! அந்த இறந்த பறவையைக் குறித்து அறிந்துள்ளதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதன் புத்தகத்தில் என் பெயர் எழுதப் பட்டுள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். அது நான் செய்த நன்மையின் காரணமாக எழுதப்படவில்லை. (இல்லை, ஐயா, அப்படியானால் அது அங்கு எழுதப்பட்டிருக்காது; நீங்கள் செய்த நன்மையின் காரணமாகவும் அல்ல), ஆனால் தேவனுடைய நன்மையையும் இரக்கங்களையும் முன்னிட்டே உலகத் தோற்றத்துக்கு முன்பே நம்முடைய பெயர்களை அவருடைய புத்தகத்தில் எழுதி வைத்தார். 109சபையின் அடையாளம் என்ன? அவள் என்னவாயிருக்க வேண்டும்? அவள் யார்? அது என்ன? வெளியே அழைக்கப்பட்ட கூட்டம். யார் அதை நிறுவினது? இயேசு கிறிஸ்து; பேராயர் அல்ல, கத்தோலிக்க சபை, மெதோடிஸ்டு சபை, லூத்தர், வெஸ்லி அல்ல. இல்லை, ஐயா அதை நிறுவினது யார்? இயேசு கிறிஸ்து. அதன் செய்தி என்ன?மனந்திரும்புதல், தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தெய்வீக சுகமளித்தல், இரட்சிப்பு. அதன் அங்கத்தினராவது எப்படி? அதற்குள் பிறப்பதன் மூலம். அது இல்லாமல் நாம் பரலோகம் செல்ல முடியுமா? இல்லை, ஐயா! கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை தேவன் அவரோடே கூடக்கொண்டு வருவார் - வேறு யாரையும் அல்ல, கிறிஸ்துக்குள் மரித்தவர்களை மட்டுமே. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்காக இயேசு வருகிறார். எபேசியர்: 4ம் அதிகாரம் என்ன கூறுகிறதென்றால்..... இல்லை, அது கலாத்தியர்: 4ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார். 110ஆகையால் அது வெளியே அழைக்கப்பட்ட கூட்டம், காணக்கூடாத சரீரம். கிறிஸ்துவே அதை ஒழுங்கு படுத்தினார். அவர் மரிக்கும் முன்பு, அது வருமென்று அவர் குறிப்பிட்டார். அவர், ''நான் வருவேன், இந்த ராஜ்யத்துக்கு ராஜாவாயிருப்பேன். இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். உங்களுக்கு உலகத்தின் ராஜ்யத்தோடு எவ்வித சம்பந்தமும் இருக்காது'' என்றார். ஆகையால் தான் அவர்கள் அத்தகைய குழப்பத்தில் ''பாபிலோனில் உள்ளனர். அவர்கள், ''நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் பிரஸ்பிடேரியன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் மெதோடிஸ்டு, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான்...'' என்கின்றனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் கிறிஸ்தவன். ஆமென். அது தான். நான் கிறிஸ்துவன் என்று எவ்விதம் அறிவேன்? விசுவாசிக்கிறவனை இந்த அடையாளங்கள் தொடரும். பாருங்கள், அதுவே உங்கள் அடையாளச் சீட்டு. “ஒரு நிமிடம் பொறுங்கள், என்னிடம் ஐக்கியச் சீட்டு உண்டென்று எண்ணுகிறேன்'' என்பதல்ல. இல்லை, என்னிடம் எந்த ஐக்கியச் சீட்டும் இல்லை. என்னுடையது மேலே உள்ளது. இந்த ஐக்கியச் சீட்டை நான் தொலைத்து விடலாம். அனால் உலகத் தோற்றத்துக்கு முன்பே அவர் எனக்கு என் அடையாளச் சீட்டை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்- ராஜ்யத்துக்குள் வரும் ஒவ்வொருவருக்கும் அது பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது, எனவே தஸ்தாவேஜுகள் அனைத்தும் சரியாக உள்ளன. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சரி. ஒருவர், ''நான் தேவனைத் தேடினேன், நான் தேவனைத் தேடினேன்'' என்றார். அது வேதத்துக்கு முரணானது. தேவன் உங்களைத் தேடுகிறார், நீங்கள் தேவனைத் தேடுவதில்லை. தேவன் ஏதேன் தோட்டத்தில் மேலும் கீழும் நடந்து, ''ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?'' என்று கூப்பிட்டார். ஆதாம், ''தேவனே, நீர் எங்கே இருக்கிறீர்?'' என்று கூப்பிடவில்லை. தேவன் தான், ''ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?' என்று கூப்பிட்டார். 111ஓ, இந்த மகத்தான சபையில் நான் அங்கத்தினனாயிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன் (நீங்களும் அப்படித் தானே? எனக்கு மிக்க மகிழச்சி). உங்களை இவ்வளவு நேரம் பிடித்து வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். இந்த மகத்தான சபையின் மேல் உங்களுக்கு விசுவாசம் உண்டா? (''ஆமென்'') இது காணக்கூடாத சரீரம் என்று விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்'') கத்தோலிக்க மக்களே, இதன் அங்கத்தினராவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஆவியினால் பிறப்பதே. பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பிரஸ் பிடேரியன், லூத்தரன் மக்களே, நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்களாயிருந்தாலும் இதைக் கவனியுங்கள் நான் பெந்தெகொஸ்தெயினரின் சார்பாக பேசுவதாக எண்ண வேண்டாம். மற்ற சபையில் உள்ளது போலவே பெந்தெகொஸ்தே சபையிலும் சத்தியத்தை துறந்தவர் உள்ளனர். அது முற்றிலும் உண்மை. அவர்கள் பெயரைத் தரித்துக் கொண்டு அதை பின்பற்றுவதாக பாவனை செய்கின்றனர், அவ்வளவு தான். ஆனால் அவர்கள் எதையும் சுதந்தரித்துக் கொள்ளவில்லை. அது உண்மை . ஏனெனில் நீங்கள் ஆவியினால் பிறக்கும் போது, புது சிருஷ்டியாகின்றீர்கள். அப்பொழுது தேவன் உங்களை குமாரராக எண்ணி நடத்துகிறார். நீங்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள். நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் அதுவல்ல.... அது சிறு உலக ஒழுங்கு, அது ஒழிந்து போகும். ஆனால் இந்த மகத்தான காணக்கூடாத சரீரத்தில் நீங்கள் அங்கத்தினராயிருக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) இல்லையெனில், இன்றிரவு அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் சிறிது நேரம் ஜெபத்திற்காக தலை வணங்குவோம்: 112இதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இங்குள்ள யாராகிலும் கையுயர்த்தி, ''தேவனே, உம்மிடம் என் கையை உயர்த்தியிருக்கிறேன். என்னை இன்றிரவு அச்சபையின் அங்கத்தினனாக்கும். எனக்குரிய மறுபிறப்பை அருளும். கர்த்தாவே, என்னை நீர் அழைத்திருக்கிறீரா? அப்படியானால் நான் அந்த சபையின் அங்கத்தினனாக விரும்புகிறேன். நான் இவ்வுலகிலுள்ள ஸ்தாபனங்களில் ஒன்றைச் சேர்ந்திருக்கிறேன், ஆனால் எனக்கு அனுபவம் கிடையாது. பிசாசுகளைத் துரத்தவும், விசுவாசிக்கிறவர்களைத் தொடர்வதாக நீர் கூறியுள்ளீர் கர்த்தாவே, அதை நான் இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. ''இந்த அடையாளம் நிச்சயம் தொடரும்'' என்று நீர் கூறியுள்ளீர். அப்படியானால் கர்த்தாவே, நீர் எனக்கு வல்லமையை அருளுவீர் என்று கூற விரும்புகிறீர்களா? 113தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னை, உன்னை, கையுயர்த்தின் உங்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதித்து, இந்த மகத்தான சபையாகிய இயேசு கிறிஸ்துவின் சபையில் அங்கத்தினராவதற்கு உங்களுக்கு வல்லமையை அருளுவாராக. நாம் ஜெபிப்பதற்கு முன்பு, வேறுயாராகிலும் உண்டா? இளம் பெண்ணே , தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆம், உன் கரங்களை நான் அங்கு பின்னால் காண்கிறேன். இங்குள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. மகனே, உன் கையை நான் காண்கிறேன். சகோதரனே, உங்கள் கரங்களை நான் காண்கிறேன். தேவன் உங்களையும், உங்கள் வாலிப மகளையும் ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும் இருந்தால், உங்கள் கையையுயர்த்துங்கள். இங்கு அமர்ந்துள்ள இந்த சகோதரியை தேவன் ஆசீர்வதிப்பாராக. ''நான் அங்கத்தினனாக விரும்புகிறேன். இன்றிரவு இக்கட்டிடத்தை விட்டு நான் செல்லும் போது, அவருடைய இரத்தம் என் மேல் ஊற்றப்பட்டு, நான் வெளியே சென்று என் வாழ்க்கை, ''கர்த்தருக்கு பரிசுத்தம்'' என்று கூற விரும்புகிறேன். பின்னால் உள்ள மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் ஆசீர்வாதங்களை உனக்கு அருளுவாராக. இப்பொழுது வேறுயாராகிலும் கையையுயர்த்த விரும்புகிறீர்களா? வேறு யாராகிலும், “தேவனே, என் மேல் கிருபையாயிரும்'' என்று கூற விரும்புகிறீர்களா? ''வீட்டுக்கு வாருங்கள்,வீட்டுக்கு வாருங்கள், களைப்படைந்தவர்களே, வீட்டுக்கு வாருங்கள்'' என்னும் பாடலை நாம் பாடும் போது, ஜெபத்திற்காக நீங்கள் பீடத்தண்டை நடந்து வர உங்களுக்கு விருப்பமானால், உங்கள் நிலையைக் குறித்து நீங்கள் உறுதியில்லாதவர்களாய் இருந்தால், நீங்கள் வரும்படி உங்களை அழைக்கிறேன்.